தமிழ் சினிமா முன்பெல்லாம் பலருக்கும் கனவாக மட்டுமே இருந்தது. ஆனால், சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி பலருக்கும் தமிழ் சினிமாவின் வாய்ப்பு வீட்டு வாசலுக்கு வந்துவிட்டது.

உங்களிடம் திறமை இருந்தால் போதும், அதை சரியான தளத்தில் வெளியிட்டால் கண்டிப்பாக வெற்றி தான், அப்படித்தான் யு-டியூபில் வெப் சீரியஸில் கலக்கிக்கொண்டிருந்த அப்துல் அதே கண்கள் படத்தில் அறிமுகமானார்.

தற்போது இரண்டாவது படத்திலேயே இளைய தளபதியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது, ஆம், விஜய்-61 படத்தில் அப்துலும் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் ஒளிப்பதிவு கூட யு-டியூபில் வெப் சீரியஸ் ஒன்றிற்கு ஒளிப்பதிவு செய்த விஷ்ணு என்பவர் தான்.