தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்தநாளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து பாடல்கள் ஆகஸ்ட் மாதமும் படம் அக்டோபரில் தீபாவளியில் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  வசூலில் ரஜினியை தாண்டும் விஜய்.! புள்ளி விவரத்துடன் கூறும் வினியோகிஸ்தர்.!

இது தீபாவளியில் வெளியாகும் விஜய்யின் 11-வது படமாகும். தீபாவளியில் வெளியான விஜய்யின் பிரியமானவளே, திருமலை, சிவகாசி, வேலாயுதம், துப்பாக்கி, கத்தி ஆகிய படங்கள் இதற்குமுன்பு வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.