எங்க வீட்டுப் பிள்ளை தலைப்பை விஜய் படத்துக்குச் சூட்டும் எண்ணமில்லை என்று விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:

பி. வெங்கட் ராம் ரெட்டி வழங்கும் விஜயா ப்ரொடெக்ஷன்ஸ் பி. பாரதி ரெட்டி தயாரிப்பில், விஜய் நடிக்கும் தளபதி 60 படத்துக்கு ‘எங்கள் வீட்டு பிள்ளை’ என்ற தலைப்பு வைக்கப்படவுள்ளது என்ற பொய்யான தகவலும் புரளியும் பரவி வருகிறது.

அதிகம் படித்தவை:  தெறி திரையரங்கில் மர்ம நபர்கள் மிளகாய் பொடி வீச்சு- ரசிகர்கள் வெளியேற்றம்!

இதற்கு சில தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்தும் வருகின்றனர். இது முற்றிலும் தவறான செய்தியாகும். ‘எங்கள் வீட்டு பிள்ளை’ என்னும் இத் தலைப்பைச் சூட்டும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இப்படத்திற்கு தலைப்பு வைப்பது பற்றி நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. சிலரால் பரப்பப்படும் பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். படத்தின் தலைப்பை பற்றிய அதிகாரபூர்வ தகவல் எங்களிடம் இருந்து சரியான நேரத்தில் வெளிவரும்,” என்று கூறப்பட்டுள்ளது.