vijay

vijay60தெறி படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை பரதன் இயக்குகிறார். கீர்த்திசுரேஷ் நாயகியாக நடிக்கிறார்.

இந்தச் செய்தி வந்தவுடன், ஜெகபதிபாபுவுக்கு எதிரான கருத்துகளும் வரத்தொடங்கிவிட்டன.

2006 ஆம் ஆண்டு அர்ஜூன் நடித்த மதராஸி படத்தின் மூலம் அவர் நேரடித்தமிழ்ப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.

அதிகம் படித்தவை:  விசுவாசம் படம் எப்பொழுது ரிலீஸ் முதல் முறையாக அறிவித்தார் சிவா.! ரசிகர்கள் கொண்டாட்டத்தில்.

அதன்பின்னர், விக்ரம் நடித்த தாண்டவம், ரஜினி நடித்த லிங்கா ஆகிய படங்களில் நடித்திருந்தார். அவ்விரு படங்களுமே வசூல் ரீதியாகப் பலவீனமான படங்களே. அதன்பின்னர் செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்த கான் படத்தில் ஒப்பந்தமானார். அந்தப்படம் பாதியோடு நின்றுபோனது. சென்டிமெண்ட் நிறைந்த திரையுலகில் இதைத்தான் இப்போது பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அதிகம் படித்தவை:  மனைவியின் வியாபாரத்திற்காக பெண் வேடமிட்ட பிரபல நடிகர்.!

விஜய்யைப் பொறுத்தவரை இதுபோன்ற மூடநம்பிக்கைகளைப் பொருட்படுத்தாதவர், இதனால் முந்தைய நடப்புகளையொட்டிப் பேசப்படும் பேச்சுகளைப் பொய்யாக்கி வெற்றி பெறக்கூடியவர் என்றும் சொல்லப்படுவதுண்டு. விக்ரம், ரஜினி, சிம்பு ஆகியோர் போலன்றி விஜய் வெல்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.