fbpx
Connect with us

Cinemapettai

விஜய் 60: கில்லியை போல் மற்றொரு ரேஸ் த்ரில்லர்

News | செய்திகள்

விஜய் 60: கில்லியை போல் மற்றொரு ரேஸ் த்ரில்லர்

gilli-vijay60இளையதளபதி விஜய் நடித்துமுடித்துள்ள ‘தெறி’ திரைப்படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் விஜய் 60′ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கிவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் விஜய் 60 படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் விஜய்யை நேரில் சந்தித்தனர்

இந்நிலையில் இந்த படம் குறித்து கருத்து தெரிவித்த படக்குழுவினர் ‘விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான கில்லியை போலவே இந்த படமும் ஒரு ரேஸ் த்ரில்லர் என்றும், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் ரசிக்கும் வகையில் இந்த படம் தயாராகும் என்றும் தெரிவித்தனர்.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக முதலில் நியமனம் செய்யப்பட்டிருந்த மதி, சுசீந்திரன் – உதயநிதி படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் ‘மைனா’ ஒளிப்பதிவாளர் சுகுமார், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top