எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் படத் தலைப்புளை இப்போது வரும் இயக்குனர்கள் கைப்பற்றி தங்கள் படங்களுக்கு வைப்பது அதிகமாகி வருகிறது.

இப்படி வைத்து நல்ல படம் கொடுத்தால் பரவாயில்லை,படத்தை சொதப்பி தலைப்பை கேவல படுத்தி விடுகிறார்கள் என்று ஒரிஜனல் தலைப்புகளில் நடித்த ஹீரோக்களின் ரசிகர்கள் கூறுகிறார்கள்.

தற்போதி விஜய் நடித்து வரும் 60வது படத்திலும் இதுதான் பிரச்சனை.எம்.ஜி.ஆரின் எங்க வீட்டுப் பிள்ளை தலைப்பை வைக்க விஜய் முடிவு செய்ததாக வெளிவந்த தகவலை அறிந்த எம்.ஜி.ஆரின் தொண்டர் படை. அனைத்துலக எம்ஜிஆர் பொதுநல சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் முக்கிய தீர்மானம் இதுதான்.

எங்க வீட்டுப் பிள்ளை தலைப்பை விஜய் படத்திற்கு வைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதத்தில் வரும் 14 ந் தேதி விஜய் வீட்டின் முன் போராட்டம் நடத்துவது! இந்த போராட்டத்திற்கு முறைப்படி போலீஸ் அனுமதி பெரும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்களாம்.