விஜய்யை அடையாளப்படுத்திய 5 ஹிட்டான குடும்ப படங்கள்.. வாரிசுக்கு முன்பே சூப்பர் ஹிட் கொடுத்த தளபதி

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் தனது 66-வது படமான வாரிசு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க குடும்பகதை களத்தை கொண்ட சென்டிமெண்ட் படமாகவே உருவாக்கப்படும் என படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால் இந்த படத்திற்கு முன்பே விஜய்யின் நடிப்பில் ஏற்கனவே குடும்ப பாங்கான கதையில் வெளியான 5 படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது.

பூவே உனக்காக: 1996 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் விஜய், சங்கீதா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் காதலியின் குடும்பத்தை சேர்த்து வைப்பதற்காக விஜய் இந்த படத்தில் படாத பாடுபடுவார். காதலில் தோல்வியை சந்தித்தாலும் விஜய் இந்த படத்தில் நண்பர்களாக இருந்த இரண்டு குடும்பத்தை சேர்த்து வைத்ததால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து சூப்பர் ஹிட் அடித்தது.

காதலுக்கு மரியாதை: 1997 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் விஜய்-ஷாலினி இணைந்து நடித்திருப்பார்கள் அண்ணன்கள் அரவணைப்பில் வளரும் ஷாலினியை விஜய் காதலிக்க, அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

பிறகு குடும்பத்தை நினைத்து மீண்டும் அவரவர் வீட்டிற்கே செல்கின்றனர். இப்படி செண்டிமெண்டாக காதலை துறக்க நினைத்த இருவருக்கும் அவர்களது குடும்பமே கடைசியில் திருமணம் செய்து வைக்கிறது. இந்தப் படத்திலும் விஜய் சென்டிமெண்டாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருப்பார்.

பிரியமானவளே: 2000 ஆம் ஆண்டின் செல்வபாரதி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் அமெரிக்காவில் வளர்ந்த விஜய், திருமணம் கலாச்சாரத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் சிம்ரனை அக்ரிமெண்ட் பெயரில் திருமணம் செய்து கொள்வார். அதன் பிறகு திருமண பந்தத்தின் மகிமையைப் புரிந்து கொண்டு மனைவியின் அன்பிற்காக இவர் தவிக்கும் தவிப்பு படத்தின் வெற்றியாக அமைந்தது.

சிவகாசி: 2005 ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சிறுவயதில் குடும்பத்தை தொலைத்து அதன்பிறகு அண்ணனிடம் அடிமைப் பட்டுக் கொண்டிருக்கும் அம்மாவையும் தங்கச்சியையும் மீட்பதற்காக குடும்பத்தினருடன் சேர்ந்து இந்த படத்தில் ஒரு யுத்தத்தையே நடத்தி இருப்பார். இந்தப் படத்தில் விஜயின் அம்மா, தங்கை சென்டிமென்ட் பக்கமாக வொர்க் அவுட் ஆகி இருக்கும்.

திருப்பாச்சி: 2005 ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் விஜய், திரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தில் விஜய், தங்கை சென்டிமென்ட்டில் ரசிகர்களை கண்கலங்க வைத்திருப்பார். தன்னுடைய தங்கையின் வாழ்க்கைக்காக மிகப் பெரிய ரவுடிகளை எதிர்த்து அவர்களின் கொட்டத்தை அடக்கி, இந்தப் படத்தில் விஜய் சென்டிமென்ட் கலந்த மாஸ் ஹீரோவாக அவதாரம் எடுத்திருப்பார்

இந்த 5 படங்களுக்குப் பிறகு கடந்த சில வருடங்களாக விஜய்யை மாஸ் ஹீரோவாக பார்த்த ரசிகர்களுக்கு, மீண்டும் வாரிசு படத்தின் மூலம் செண்டிமென்ட் கதாநாயகனாக பார்க்க இருப்பது புது அனுபவத்தை தரப் போகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்