தளபதி விஜய்யின் படு தோல்வியான 10 படங்கள்.. ஆனா, இப்ப இவர்தான் கோலிவுட்டின் வசூல் ராஜா!

தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகர் தளபதி விஜய். தமிழகம் முழுக்க ரசிகர் பட்டாளம் ரசிகர் மன்றம் என எவ்வளவோ இருந்தும் இவரின் படங்களும் சில தோல்விகளை கண்டிருந்தன ஆரம்ப காலத்தில் கலவையாக வந்தாலும் இப்போது தலைமை நிலையில் உள்ளவர்கள்.

தல தளபதி இத்கைய சூழலிலும் இவர்களின் சில படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரிய கலெக்சன்களை தொடாமால் நகர்கின்றன சில ப்ராஜக்டுகள். என்னதான் ரசிகர் பட்டாளம் இருந்தாலும் நடுநிலை ரசிகர்களின் முடிவே படத்தின் விமர்சனம்.

கடந்த 2015ல் சிம்புதேவன் இயக்கத்தில் தளபதி நடித்த “புலி“. கலவையான விமர்சனங்கள் தந்தாலும் இப்படம் பாக்ஸ ஆபீஸில் அவ்வளவாக இல்லை.

puli-movie
puli-movie

தலைவா” இப்படத்தினை அறிந்திருக்காத ரசிகர்களே இல்லை அத்தனை பிரச்சனைகளை சந்தித்தது இப்படம். அதனாலோ என்னவோ கேராளாவில் ரிலீசான பிறகு சில தினங்கள் கடந்து தமிழ்நாட்டில் ரிலீசானது. இந்த இடைவேளையும் கடுமையான எதிர்பார்ப்பும் கூட இப்படத்தின் பாக்ஸ் ஆபீஸை பாதித்தது எனலாம். இயக்குனர் ஏ.எல்.விஜய இயக்கி அமலாபால் ஜோடி சேர்ந்த தலைவாவும் தளபதிக்கு தோல்வியை தந்தது.

அடுத்தது தளபதியின் ஐம்பதாவது படமான “சுறா” இப்படம் ரசிகர்களில் பலரையும் சிக்க வைத்த படம். வெளியான இரண்டு மூன்று நாட்கள் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம். நடுநிலை ரசகர்களை பெரிதும் கவரவில்லை அதற்கு இப்படத்தின் கதையும் திரைக்கதையும் கூட காரணம். வடிவேலு தமன்னா என ஒரு நல்ல கூட்டணியில் படம் வெளி வந்தாலும் பெரிதாய் ரசிக்க வைக்கவில்லை என்பதாலே பாக்ஸ் ஆபீஸில் தோல்வி தந்தது.

sura-cinemapettai
sura-cinemapettai

தளபதியின் “ஆதி” 2006 ல் வெளிவந்த இப்படம் அப்போதய தொடர் வெற்றிகளை தளபதிக்கு தேடித்தந்த நாயகி திரஷாவோடு மூன்றாம் முறை கூட்டணி அமைத்தது. நல்ல கதையம்சத்தோடு படம் இருந்தாலும் படமாக்கப்பட்ட விதமும் திரைக்கதையின் தொய்வும் படத்தை சரியாக வழிநடத்தாமல் போனது. அதனாலோ என்னவோ பாக்ஸ் ஆபீஸை பொறுத்தவரை ஃப்ளாப்.

அடுத்தது தளபதி சிம்ரன் கூட்டணியில் உருவான “உதயா” டிரண்டிங் இல்லாத நாயகி டிரண்டிங் மாறிய கதை என எல்லாவும் இப்படத்தின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம். வெற்றியை தளபதிக்கு வாரித்தந்த சிம்ரனும் தோல்வி தந்தது படத்தின் நீளமும் படமாக்கப்பட்ட விதமும் கூட ஒரு காரணம் தான். அப்போது அந்த அளவில் வளர்ந்திடாத நடிகர் என்பதும் கூட காரணமாக இருக்கலாம். பாக்ஸ் ஆபிஸை பொறுத்த வரை படம் ஃப்ளாப்.

என்றென்றும் காதல் தளபதி விஜய் ரம்பா கூட்டணியில் 1999ல் திரைக்கு வந்த படம் என்றென்றும் காதல் பல்வேறு படங்களில் வெற்றி நாயகியாக வலம் வந்த ரம்பா இப்படத்தில் தளபதிக்கு தோல்வியை தேடித்தந்தார். படத்தின் பாடல்கள் எல்லாம் ஹிட் என்றாலும் அப்போதய சினிமா ரசிகர்களை பெரிதும் கவராமல் போனது இப்படம்.

அதே ஆண்டில் தளபதி இஷா கூட்டணியில் வெளியான படம் “நெஞ்சினிலே” வழக்கமான படங்களை விட கதைக்கருவிலும் திரைக்கதையிலும் மாற்றம் கொண்டது அப்போதய சினிமா ரசிகர்களுக்கு புதுமையானதாய் அமைந்தது. பாடல்கள் அனைத்திலும் ஹிட்டடித்த இப்படத்தில் “உன் தங்க நிறத்துக்கு தான்” என்கிற பாடல் தளபதி விஜய் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

isha-gopikar
isha-gopikar

என்னதான் வெற்றிக்கான வாய்ப்புகள் ஏகப்பட்டவை இருந்தாலும் படம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனை எட்டவில்லை. அடுத்தது தளபதி அன்றைய சிறந்த குடும்ப நடிகை சுவலட்சுமி கூட்டணியில் வந்த “நிலவே வா“. 1998ல் வெளிவந்த இப்படம் சில வேறு காரணங்களுக்காக தாமதப்படத்தி வெளியாகியது.

இப்படத்தின் கதையமைப்பு இப்படத்திற்கு அப்போதய சினிமா ரசிகர்களை பெரிதும் விரும்பவைக்கவில்லை. பாடல்களில் ஹிட் கொடுத்த இப்படம் வசூலில் பெருமளவு சரிசெய்யவில்லை. அடுத்து வனிதா விஜயகுமார் அறிமுகமான சந்திரலேகா.

chandraleka
chandraleka

தளபதி வனிதா கூட்டணியில் 1995ல் வெளியான இப்படம் கதைக்களத்தையும் திரைக்கதையையும் வெவ்வேறு பாதைகளில் அழைத்துச்சென்றதும் இப்படத்தின் தோல்விக்கு மிகப்பெரிய காரணம். ஆடியோ கேசட்டுகளில் வசூலை வாரிய இப்படம் திரையில் பெரிய வெற்றியை காணவில்லை. பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனில் சறுக்களை சந்தித்தது.

தளபதி விஜய் அறிமுகமான படம் “நாளைய தீர்ப்பு“. பொதுவாக அறிமுக நட்சத்திரங்களுக்கான எதிர்ப்பு இப்படத்தின் கலெக்சனை பாதித்தது. அன்றைய திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி கமல் சரத்குமார் விஜயகாந்த் அருண்பாண்டியன் ராம்கி ரசிகர்கள் மத்தியில் இப்படம் வரவேற்கப்படவில்லை. கலெக்சனை பொறுத்தவரை இப்படம் தோல்வியை சந்தித்தது.

Next Story

- Advertisement -