நன்றி மறந்த விக்னேஷ் சிவன்.. நயன்தாரா மீது கடுப்பில் நெருங்கிய உறவு

தமிழ் ரசிகர்கள் உட்பட பலரும் மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து வந்த ஒரு விஷயம் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் திருமணம் பற்றி தான். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நயன்தாரா நீண்ட காலமாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார்.

பல வருடங்களாக தங்கள் காதலை வளர்த்து வந்த இந்த ஜோடி தற்போது திருமண பந்தத்தில் இணைய இருக்கின்றனர். வரும் ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் இவர்களுடைய திருமணம் விமரிசையாக நடைபெற இருக்கிறது. இது பற்றி தான் ஊடகங்களில் பேச்சாக கிடக்கிறது.

இந்நிலையில் விக்னேஷ் சிவனின் நெருங்கிய உறவினரான அவருடைய பெரியப்பா இந்த திருமணத்திற்கு அழைக்கப்படவில்லை என்று வருத்தத்துடன் பேசியிருக்கிறார். விக்னேஷ் சிவனின் பெற்றோருக்கு திருச்சி அருகே லால்குடி பக்கம்தான் சொந்த ஊர். ஆனால் பல வருடங்களுக்கு முன்பே அவர்கள் சென்னைக்குக் குடிபெயர்ந்து விட்டார்கள்.

அதன் பிறகு அவர்கள் சொந்த ஊரில் இருக்கும் உறவுகளோடு அதிக பேச்சு வார்த்தையில்லாமல் இருந்திருக்கிறார்கள். விக்னேஷ் சிவனின் சகோதரி ஐஸ்வர்யாவின் திருமணத்திற்கு கூட அவர்கள் உறவுகள் யாரையும் அழைக்கவில்லையாம்.

பிள்ளைகள் இல்லாத விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் அவர்கள் இருவரையும் தான் பெற்ற பிள்ளைகள் போல் நினைத்து வந்தாராம். ஆனால் அவர்கள் தன்னை திருமணத்திற்கு அழைக்காமல் ஒதுக்கி வைத்துள்ளது மிகவும் வருத்தமாக இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

இந்த விஷயம் தற்போது மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சமீபகாலமாக நயன்தாரா எடுக்கும் முடிவை தான் விக்னேஷ் சிவன் கேட்பதாகவும், அதனால்தான் நெருங்கிய சிலரை தவிர யாரையும் திருமணத்திற்கு விக்கி அழைக்கவில்லை என்றும் திரை உலகில் பேசப்பட்டு வருகிறது.

Next Story

- Advertisement -