fbpx
Connect with us

இந்த உலகமே எதிர்த்தாலும் நாங்க சுற்றுவது சுற்றுவதுதான்..! நயன்தாரா-விக்னேஷ்சிவன் கலக்கல் புகைப்படங்கள்!

News | செய்திகள்

இந்த உலகமே எதிர்த்தாலும் நாங்க சுற்றுவது சுற்றுவதுதான்..! நயன்தாரா-விக்னேஷ்சிவன் கலக்கல் புகைப்படங்கள்!

கிறிஸ்துமஸ், பொங்கல் கொண்டாடி மகிழும் நயன்தாரா..!

லேடி சூப்பர் ஸ்டார், தனக்கேற்ற கதைக்களம், தனக்கென்று ஒரு பாதை இவை அனைத்தும் பொருந்தும் ஒரு ஹீரோயின் நயன்தாரா. ‘ஐயா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர். இதனை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தற்பொழுது பொங்கலுக்கு ரிலீசாகும் படத்திலும் தல அஜித்துடன் இணையும் விஸ்வாசம் படம் உள்ளது. அதற்கு முன் விக்னேஷ் சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகிறார்.

இவர் சிறிது காலமாக இயக்குனரான விக்னேஷ் சிவனுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் உள்ளார். அவர்கள் திருமணத்தை பற்றி எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை. விக்னேஸ்வரன் அவர்கள் இயக்குனராக போடா போடி, தானா சேர்ந்த கூட்டம், மற்றும் நானும் ரவுடிதான் போன்ற வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

இது மட்டுமல்லாமல் 2007இல் சிவி என்ற ஒரு பேய் படத்தில் அவர் நடித்துள்ளார் ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை. இதனால் மனமுடைந்த விக்னேஷ் சிவன் 2012ல் போடா போடி என்ற படத்தை  இயக்குவதற்கு சிம்பு ஒரு வாய்ப்பு கொடுத்தார். இவர் கடைசியாக எடுத்த படம் தான் ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஓரளவு நன்றாக ஓடியது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஒன்றாக கிறிஸ்மஸ் கொண்டாடுவதை சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமாகி வருகிறது. இவர்கள் இருவரும் இணைந்து படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன பொருத்திருந்து பார்க்கலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top