20 வருடத்திற்கு முன்னாடியே வந்த 11 படத்தின் கதையை காப்பி அடித்த விக்னேஷ் சிவன்.. அரைச்ச மாவையே அரைக்கிறீர்களே

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்தப்படம் நகைச்சுவை கலந்த ரொமான்டிக் முக்கோண காதல் கதையை கொண்ட திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இது தமிழ் சினிமாவிற்கு புதிதல்ல. இதே கதைக்களத்தை கொண்ட 11 வெற்றிப்படங்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கிறது.

மின்னலே: 2001ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான இந்த படத்தில் தன்னைப் பார்க்க வந்த மாப்பிள்ளை மாதவன் என நினைத்து ரீமா அவரிடம் நெருங்கிப் பழக, சில நாட்களுக்குப் பிறகுதான் ஒரிஜினல் மாப்பிள்ளை அப்பாஸ் வர மாதவனை புறக்கணிக்கிறார். ரீமாசென் இப்படி முக்கோணக் காதலை வெளிப்படுத்தும் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது.

உன்னை நினைத்து: இயக்குனர் விக்ரம் எழுதி இயக்கிய சூப்பர் ஹிட் அடித்த இந்த படத்தில் சூர்யா, லைலா, சினேகா மூவரும் நடித்திருப்பார்கள். சூர்யாவிடம், தான் காதலிக்கும் லைலாவை மருத்துவம் படிக்க வைக்க வேண்டிய பண உதவியை அவருடைய பெற்றோர்கள் வாங்கிக் கொள்கின்றனர். கடைசியில் வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொள்ளப்போவதாக இருக்கும்.

இதையெல்லாம் தெரிந்த சினேகாவும் சூர்யாவை காதலிப்பார். கடைசியில் லைலாவை அவர் திருமணம் செய்து கொள்ள நினைத்த நபர் ஏமாற்றி விட, பிறகு மீண்டும் சூர்யாவை தேடி வருவார். கடைசியில் சூர்யா, லைலா அல்லது சினேகா இருவரில் யாரை திருமணம் செய்து கொள்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

காதல் தேசம்: கதிர் எழுதி இயக்கிய இந்தப்படத்தில் வினித், அப்பாஸ், தபு ஆகிய 3 பேரும் நண்பர்களாக பழகுவார்கள். ஆனால் தபுவை அப்பாஸ்,வினித் இருவருமே காதல் செய்வார்கள். கடைசியில் தப்பு யாரை திருமணம் செய்து கொள்வதுதான் இந்த படத்தின் கதை.

நினைத்தேன் வந்தாய்: இந்தப்படத்திலும் வருங்கால கணவனாக விஜய்யை நினைத்துக்கொண்டிருக்கும் தேவயானி ஒருபுறம், தேவயானியின் தங்கையான ரம்பா-விஜய் இருவரும் மனதார காதலிப்பார்கள். கடைசியில் அக்காவிற்கு தன்னுடைய காதலை விட்டுக் கொடுக்க நினைக்கும் ரம்பா, பிறகு விஜய் யாரை திருமணம் செய்து கொள்வதுதான் இந்தப்படத்தின் சுவாரஸ்யம்.

இயற்கை: எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் ஷாம் ராதிகாவை காதலிக்க, ஆனால் ராதிகா அருண் விஜய்யை காதலிப்பார். ஒரு கட்டத்தில் அருண்விஜய் உயிரோடு இல்லை என்று உறுதியாகாமல் இருக்கும் நிலையில் ஷாம்-ராதிகா இருவரும் திருமணம் நடக்கப் போகும் சமயத்தில் திடீரென்று அருண்விஜய் வர, அருண்விஜய் மற்றும் ராதிகா இருவருக்கும் திருமணம் நடக்கும் ஷாம் ஒதுங்கி விடுவார்.

ஷாஜகான்: இந்த படத்தில் கதாநாயகி ரிச்சா, விஜய்யை காதலிக்காமல் கிருஷ்ணாவை காதலிப்பாள். இதை அறிந்த விஜய் காதலியின் விருப்பத்திற்கேற்ப அவளுடைய காதலனுடனே சேர்த்துவைத்து தன்னுடைய காதலியை தியாகம் செய்வது போன்று படமாக்கப்பட்டிருக்கும்.

மின்சார கனவு: கஜோலை காதலிக்கும் அரவிந்த்சாமி, ஆனால் கஜோ, பிரபுதேவாவை காதலித்து கடைசியில் அரவிந்த்சாமி துறவரம் சென்றுவிட, கஜோ-பிரபுதேவா இருவருக்கும் அரவிந்த் சாமி அவர் கையால் இந்தப்படத்தில் திருமணம் செய்து வைப்பார்.

மௌனம் பேசியதே: அமீர் இயக்கிய இந்தப் படத்தில் சூர்யா ஒருதலைபட்சமாக திரிஷாவை காதலிக்க, திரிஷா வேறு ஒரு நபரை காதலிப்பாள். ஆனால் லைலா கல்லூரி படிக்கும் முதலிருந்தே சூர்யாவைத் திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் காதலித்து வருவாள். கடைசியில் சூர்யா-லைலா இருவரும் இணைவார்கள்.

இதேபோன்று தான் கண்ட நாள் முதல் படத்திலும் பிரசன்னா, லைலா, கார்த்திக் குமார் ஆகிய மூவருக்கும் இடையே முக்கோண வடிவில் காதல் உருவாகும். மேலும் தனுஷ் படமான யாரடி நீ மோகினி படத்திலும் நயன்தாரா, தனுஷ், சித்தார்த் உள்ளிட்ட மூன்று பேருக்கும் மாறி மாறி காதல் வயப்பட்டு கடைசியில் யார் சேர்வார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை.

அதைப்போன்றே ஹே சினாமிகா தெலுங்கு படத்திலும் முக்கோண காதல் கதையை மையமாக வைத்து தான் படம் எடுத்திருப்பார்கள். இவ்வாறு இதுவரை வெளியான சுமார் 11 படங்களில் மையக்கருவாக வைத்திருக்கும் முக்கோண காதல் கதையை அப்படியே மீண்டும் விக்னேஷ் சிவன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் மூலம் இரு தோழிகளை ஒரே நேரத்தில் காதலித்த கதாநாயகனின் சுயரூபம் தெரிந்ததும் அதன்பிறகு அவன் சந்திக்கும் சிக்கல்களையும் அதை எப்படி சமாளிக்கிறான் என்பதையும் இந்த படத்தில் காட்டி இருப்பது எந்த அளவுக்கு வெற்றியை தரப்போகிறது என படம் வெளியானால் தான் தெரியவரும்.

Next Story

- Advertisement -