Tamil Cinema News | சினிமா செய்திகள்
நயனுக்கு வாழ்த்து சொல்லிய நெட் பிளிக்ஸ் அட்மின்! மீம்ஸ் போட்டு கலாய்த்த விக்னேஷ் சிவன்
கோலிவுட்டின் நெக்ஸ்ட் ஜெனெரேஷன் இயக்குனர்களில் முக்கியமானவர் விக்கி. இளசுகளின் பேவரைட் இயக்குநர் என்று பெயரெடுத்து விட்டார். மேலும் கோலிவுட்டில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டார். இவருக்கு இன்னொரு முகமும் உள்ளது. நயன்தாராவின் பாய் பிரென்ட், காதலர், ஹவுஸ் – மேட், பாவொரிட் இயக்குனர், மென்டோர் என்று எப்படி வேண்டுமாலும் இவரை அழைக்கலாம். மனிதர் ஸ்டைலிஷ் மற்றும் ட்ரெண்டியானவர்.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடி தமிழ் சினிமாவில் பிரபலமாக தற்போது வலம் வருகின்றனர். நானும் ரவுடிதான் படத்தின் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. தங்கமே என மனிதர் சமூகவலைத்தளங்களில் கூட நயனுக்காக உருகுவார் என்பது நாம் அறிந்ததே. நீண்ட நாட்களாக இருவரும் காதலித்து வரும் நிலையில் கல்யாணம் பற்றி எந்த தகவலும் இல்லை. ஆனால் ரௌடி பிக்சர்ஸ் என்ற பெயரில்
நிறுவனம் தொடங்கி பட தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
நெற்றிக்கண் படத்தில் நயனுக்கு முக்கிய ரோல். 2011-ம் ஆண்டு வெளியான கொரியன் படமான ‘ப்ளைண்ட்’ (blind ) பட ரீமேக். இப்படத்தின் டீசரை நேற்று தன் காதலியின் பிறந்தநாளை முன்னிட்டு காலை 909 மணிக்கு வெளியிட்டு அசத்தினார்.

nayanthara
ட்விட்டரில் பலரும் நயனுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நெட்டபிலிக்ஸ் பக்கத்தில் “நீங்கள் நயனாக இருக்கலாம் ஆனால் எப்பொழுதுமே 10 / 10 எடுக்கும் நடிகை தான். பிறந்தநாள் வாழ்த்துக்கள்.” என பதிவிட்டிருந்தார் அட்மின்.
இதை பார்த்த விக்கி, யாரு டா இவன் நம்மளையே மிஞ்சும் அளவுக்கு லவ் மிகுதியில் இருக்கானே என கிண்டலாய், ஐ படத்தில் விக்ரமை பார்த்து பொருமும் போட்டோவை பதிவிட்டுள்ளார்.

net flix tweet
அன்பான இயக்குனர் இம்முறை நயன்தாராவுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடவில்லையாம். அடடே !
