Tamil Cinema News | சினிமா செய்திகள்
ட்விட்டரில் லைக்குகளை அள்ளிக்குவித்தது அன்பான இயக்குனரின் குசும்பான பிறந்த நாள் வாழ்த்து
Published on

சூர்யா
கடந்த ஜூலை 22 ஆம் தேதி சூர்யா தன் 43 வது பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் ட்விட்டரில் பல செலிபிரிட்டிகள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்தை ட்விட்டரில் தெரிவித்தனர்.
விக்னேஷ் சிவன்
தானா சேர்ந்த கூட்டம் படத்தின் வாயிலாக கூட்டணி வைத்த நம் அன்பான இயக்குனர் சூர்யாவின் பாவொரிட் ஆனார். இந்நிலையில் இயக்குனர் நம் ஹீரோவுக்கு சொன்ன வாழ்த்து வைரல் ஆகியுள்ளது.
“உங்களுடன் பணியாற்றிய பொழுது, உங்களுள் உள்ள ரியல் ஹீரோவை நான் பார்த்தேன். நீங்கள் இந்த சமுதாயத்திற்காக செய்த நல்ல விஷயங்கள் மிகுந்த ஊக்கத்தை தருகின்றது. மேலும் இது தொடரட்டும், உங்களுக்கு ஆசீர்வாதம் பெருகட்டும். ஹாப்பி 24 வது பிறந்தநாள் சூர்யா சார்” என்பதே அது.
