Tamil Cinema News | சினிமா செய்திகள்
படத்தை பாருங்க – உங்கள் ஆதரவை கொடுங்க ! அமிர் கான் , அமிதாப் பச்சனிடம் வேண்டுகோள் வைத்த விக்னேஷ் சிவன் !
விக்கி
இன்றைய நெக்ஸ்ட் ஜென் கமெர்ஷியல் இயக்குனர்களில் முக்கியமானவர். மனிதர் எப்பொழுதும் தன் சமூகவலைத்தள பக்கங்களில் பிஸியாக இருப்பவர். இந்நிலையில் இவர் நம் தமிழ் சினிமாவின் முத்து பரியேறும் பெருமாள் என ட்விட்டரில் அமிர் கான் மற்றும் அமிதாப் பச்சனிடம் சொல்லியுள்ளார்.

thugs of hindostan
பாலிவுட்டில் இரண்டு ஜாம்பவங்கள் நடித்து, தீபாவளிக்கு வெளியாக உள்ள படம் தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான். இந்திய வரலாற்று பின்னணயில் இப்படம் ரெடி ஆகியுள்ளது. தமிழ் , தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இப்படம் ரிலீசாகிறது. முழுவீச்சில் இப்படத்திற்கு மார்க்கெட்டிங் நடந்து வருகின்றது.

pariyerum perumal
“உங்களின் படத்தை நாங்கள் தமிழில் பார்த்து விரைவில் என்ஜாய் செய்ய உள்ளோம். மனித நேயம் மற்றும் சமத்துவத்தை பேசும் எங்கள் படம் பரியேறும் பெருமாள் பார்த்துவிட்டு, உங்கள் ஆதரவை தாருங்கள். ரஞ்சித் , மாறி செல்வராஜ் , சந்தோஷ் நாராயணின் படைப்பு .” என்று பதிவிட்டுள்ளார்.
Dear @aamir_khan & @SrBachchan
While we all are going to enjoy #ThugsOfHindostan soon in TamilNadu..We request U to watch & support a gem of a film called #Pariyerumperumaal which speaks about humanity& the immortal inequality, made by @beemji , @mari_selvaraj @Music_Santhosh pic.twitter.com/id5WkBFfJc
— Vignesh ShivN (@VigneshShivN) September 28, 2018
