Connect with us
Cinemapettai

Cinemapettai

NGK பார்த்துவிட்டு அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவிட்ட ஸ்டேட்டஸ். 11000 லைக்குகள் பெற்று தெறிக்குது ட்விட்டர்.

Thana-Serndha-koottam surya vignesh shivan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

NGK பார்த்துவிட்டு அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவிட்ட ஸ்டேட்டஸ். 11000 லைக்குகள் பெற்று தெறிக்குது ட்விட்டர்.

NGK வாக சூர்யா, இன்றைய பல இளசுகளின் ஆழ் மனதில் உள்ள ஆதங்கத்தை வெளிக்காட்டும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோட்பாட்டை மையப்படுத்தும் படம். பொது மற்றும் சமுதாய அக்கறை உடைய, அரசியல் பின் புலம் எதுவும் இல்லாத ஒருவன் எவ்வாறு அதன் நுணுக்கங்களை கற்று செயல்படுகிறான் என்பதே படத்தின் கதை.

இப்படத்தில் புரட்சிகரமான திமிரணும்டா பாடலை எழுதியது விக்னேஷ் சிவன் தான். எனவே படத்தின் ஜானர், கதையம்சம் ரிலீசுக்கு முன்பே இவருக்கு அத்துப்படி தான்.

இந்நிலையில் இவர் படத்தை ஐரோப்பில் உள்ள பிரமாண்ட La Grand Rex திரையில் பார்த்துள்ளதாக ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார்.

மேலும் பிரான்சில் இருந்து ரசிகர்கள் வந்து ஆரவாரமாக படத்தை பார்த்தனர் எனவும், சூர்யாவின் நேர்மையான மற்றும் ஆக்ரோஷமான நடிப்பு திரையை தெறிக்கவிட்டது என கூறியுள்ளார். மேலும் செல்வா மற்றும் யுவன் அசத்தலான அரசியல் கலந்த திரில்லர் படத்தை கொண்டுவந்துள்ளனர் நம் கண் முன்னே என பதிவிட்டுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top