Photos | புகைப்படங்கள்
விக்கி- நயன் பிரேக் அப் விவகாரம்.. வேற லெவல் போட்டோ பதிவிட்ட அன்பான இயக்குனர்
தமிழ் சினிமாவில் தற்போதைய பிரபல காதல் ஜோடியாக வலம் வருவது இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா. நானும் ரவுடி தான் படத்தின் வாயிலாக ஆரம்பமான இவர்களது காதல் தற்போது “ரௌடி பிக்ச்சர்ஸ்” ஆரம்பித்தது வரை வளர்ந்துள்ளது.
அடிக்கடி வெளிநாடு ட்ரிப் அடிப்பது இந்த ஜோடியின் பாவரிட் விஷயங்களில் ஒன்று. ஆனால் சமீபத்தில் கோவில் கோவிலாக இவர்கள் விசிட் அடிக்க விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என கோலிவுட் பட்சிகள் சொல்லினர். ஆனால் எந்த அறிவிப்பும் வரவில்லை. அதுமட்டுமன்றி சமீபத்திய நிகழ்ச்சிக்கு பேபி தனியாக வர; உடனே நம்ம ஆட்கள் வாக்குவாதம் ஏற்பட்டது, காதல் புட்டுக்கிச்சி, லிவிங் டுகெதர் வெறுத்திடுச்சு என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டனர்.
இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நயன் சமீபத்தில் விருது நிகழ்ச்சியில் கலக்கிய அதே புடவையில் இந்த ஜோடி க்ளிக்கிய செல்ஃபியை தனது டிஸ்பிளே பிக்சராக இன்ஸ்டாகிராமில் மாத்தியுள்ளார் விக்னேஷ் சிவன்.

nayanthara vignesh shivan
மேலும் நயன்தாரா – சிப்ஸ் பாக்கெட் போட்டோ பதிவிட்டு, என்றும் என்றென்றும், பாசிட்டிவ் பீல் மட்டுமே என்றெல்லாம் தட்டியுள்ளார்.

nayanthara
மீடியா யூ ப்ளீஸ் ஷட் அப் என சொல்லாமல் சொல்லியுள்ளார். சரிங்க இயக்குனரே !
