கொரோனா பற்றி அப்பவே டிப்ஸ் குடுத்த வடிவேலு..

உலகத்தையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோன வைரசின் கோரத் தாண்டவத்தில் இந்தியாவும் தற்போது சிக்கியுள்ளது. இதற்கான விழிப்புணர்வை மத்திய மாநில அரசுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில் மக்கள் அதிகமாக கூடும் மால்கள், பள்ளிக்கூடங்கள், தியேட்டர்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. உலகளவில் கிட்டத்தட்ட 8,000 பேரை காவு வாங்கியுள்ளது. மக்கள் தங்களை பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விக்னேஷ் சிவன் தற்போதைய லேடி சூப்பர் ஸ்டாரின் காதலன். இவர் இயக்கம் மட்டுமில்லாமல் தயாரிப்பு, பாடலாசிரியர் போன்ற பல முகங்களை கொண்டவர் முக்கியமாக தற்போதைய காதல் மன்னன் என்று கூறலாம், அதுவும் ஒரு முகம் தான்.

இவர் தற்போது முதல் முறையாக தளபதியின் மாஸ்டர் படத்திற்கு பாடல் ஒன்றில் இயற்றியுள்ளார். நெற்றிக்கண் என்ற படத்தை தயாரித்து வருகிறார், அதற்கும் மேலாக விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா போன்ற முன்னணி பிரபலங்களை வைத்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தை இயக்கியும் வருகிறார். இந்த படம் நானும் ரவுடிதான் படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களை வைரஸ் விழிப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் வடிவேலு முன்னதாக நடித்திருந்த வீடியோ காமெடியை வெளியிட்டு, தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அப்போதே வடிவேலு வணக்கம் சொல்லி தமிழ் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாக காமெடி செய்திருப்பது தற்போது விழிப்புணர்வு வீடியோவாக வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

Leave a Comment