Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபுதேவாவை நம்பி நயன்தாராவை அனுப்ப முடியாது.. கிளி பறந்து விடுமோ என்ற பயத்தில் விக்னேஷ் சிவன்
நவீனகால பாஞ்சாலி என ரசிகர்கள் அன்போடு அழைக்கும் அளவுக்கு தமிழ் சினிமாவில் அதிக காதல் பஞ்சாயத்தில் சிக்கிய நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றாவது முறையாக காதலில் விழுந்துள்ளார் நயன்தாரா.
நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது காதல் கொண்டு தற்போது அவருடன் வலம் வருகிறார். நயன்தாராவின் லிஸ்டில் சிம்பு, பிரபுதேவாவுக்கு பிறகுதான் விக்னேஷ் சிவன் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
ஆனால் நயன்தாரா தெளிவாக சினிமா வேறு குடும்பம் வேறு என்பதை புரிந்து வைத்துள்ளார். இடையில் தனது முதல் காதலரான சிம்புவுடன் இது நம்ம ஆளு படத்தில் நடித்தார். அந்த படத்தில் நடித்தபோதே சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் மீண்டும் காதல் மலர்ந்து விட்டதாக பல குழப்பங்கள் ஏற்பட்டன.
இந்நிலையில் மீண்டும் தனது இரண்டாவது காதலரான பிரபுதேவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விஷால் மற்றும் கார்த்தி நடிப்பில் பிரபுதேவா இயக்கத்தில் உருவாக இருந்த கருப்பு ராஜா வெள்ளை ராஜா படம் டிராப் செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் அந்த படத்தை தூசு தட்ட உள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். ஏற்கனவே ஐசரி கணேஷ் தயாரிப்பில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வரும் நயன்தாராவிடம் இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றதாம்.
நயன்தாராவும் பெரிய சம்பளம் என்பதால் நடிக்க ஓகே சொல்லிவிட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் இது விக்னேஷ் சிவனை பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் பலவிதமாக விக்னேஷ் சிவனை கலாய்த்து வந்தாலும் நயன்தாராவை விடாமல் தனது கைக்குள் வைத்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் தொடர்ந்து பழைய காதலர்களின் படங்களில் தனது புதிய காதலி நடிகை ஆரம்பித்து விட்டால் நம்முடைய வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற கவலையில் உள்ளாராம் விக்னேஷ் சிவன். இதனால் பிரபுதேவா படத்தில் நடிக்க வேண்டாம் என அவருக்கு கட்டளை விட்டதாக தெரிகிறது.
ஏண்டா கண்ணு, அவ்வளவு பயம் இருக்குறவங்க எதுக்கு லவ் பண்ணனும்?
