நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பிய நெட்பிளிக்ஸ்.. டூம்மாங்கோலி வேலை செய்த விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் நயன்தாராவை சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் பல பிரபலங்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது. மேலும் திருமணத்திற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் காரணமாக ஒரு சில பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.

மேலும் நயன்தாரா தனது திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திடம் 25 கோடி ரூபாய்க்கு கொடுத்தது. அதற்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் திருமண சம்பந்தப்பட்ட எந்த ஒரு புகைப்படங்களும் வீடியோக்களும் நயன்தாரா விக்னேஷ் சிவன் வெளியிடக்கூடாது என ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் திருமண புகைப்படங்கள் வெளியாகாமல் இருந்தால்தான் ரசிகர்கள் நயன்தாராவின் திருமணத்தை பார்ப்பதற்கு ஆவலாக இருப்பார்கள். ஆனால் சில நாட்களாக திருமண புகைப்படங்கள் வெளியிடாமல் இருந்த விக்னேஷ் சிவன் அதன்பிறகு பிரபலங்களுடன் இருக்கும் திருமண புகைப்படங்கள் வெளியிட்டார்.

அதாவது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் திருமண வீடியோவை உடனே வெளியிடாமல் காலதாமதம் ஆனதால் தான் விக்னேஷ் சிவன் திருமண புகைபடங்கள் வெளியிட்டதாக கூறினர். இதனால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் கோபமடைந்து திருமண வீடியோவை தாங்கள் பெற்றுக்கொள்ளவில்லை என கூறிவிட்டனர்.

தற்போது நயன்தாரா திருமணத்திற்கு நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் திருமண ஏற்பாடு செலவுகளைப் பற்றி கூறியுள்ளது. திருமண ஏற்பாடுகள், மணமேடை, மனம் நடந்த இடத்தின் அலங்காரம் பிரபலங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டல் செலவு, செக்யூரிட்டி மற்றும் ஒருவருக்கான உணவு செலவு 3,500 ரூபாய் உட்பட ஒரு குறிப்பிட்ட தொகையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் செலவு செய்துள்ளது.

தற்போது தங்களது ஒப்பந்தத்தை மீறி புகைப்படங்கள் வெளியானதால் தாங்கள் செலவு செய்த தொகையை திருப்பித் தரவேண்டும் என நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரைக்கும் நயன்தாரா விக்னேஷ் சிவன் நெட்ப்ளிக்ஸ் மூவரும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்