புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

தனுஷ்-நயன் விரோதத்துக்கு காரணமே விக்னேஷ் சிவன் தான்.. பிள்ளையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டுறாரே!

Dhanush: பிள்ளையையும் கிள்ளி விட்டுவிட்டு தொட்டிலையும் ஆட்டுறதுன்னு சொல்லுவாங்க. அப்படி ஒரு வேலையை தான் விக்னேஷ் சிவன் செய்திருக்கிறார். நடிகை நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள்.

இவர்கள் கொடுத்திருக்கும் பழைய பேட்டிகளே அதற்கெல்லாம் சாட்சி. விக்னேஷ் சிவன் என்ற இயக்குனர் நயன்தாராவிடம் சென்று நீங்க இந்த மாதிரி ஒரு கேரக்டரில் நடிக்கணும்னு சொல்லி இருந்தா கண்டிப்பா அவர் ஒத்துக்கிட்டு இருந்திருப்பார் என்று கூட தெரியாது.

விரோதத்துக்கு காரணமே விக்னேஷ் சிவன் தான்

தனுஷ் என்ற ஒரு நபருக்காக தான் நயன்தாரா இந்த நானும் ரௌடி தான் படத்திற்குள் வந்தது. ஆனால் விக்கி மற்றும் நயன்தாரா இருவருக்குள்ளும் காதல் மலர்ந்த பிறகு விக்னேஷ் சிவன் படப்பிடிப்பில் அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை என வலைப்பேச்சு பிஸ்மி சொல்லி இருக்கிறார்.

இதனால் போட்ட பட்ஜெட்டை படம் தாண்டி இருக்கிறது. VIP படத்திற்காக போஸ்டர் டிசைனிங் பண்ணி கொடுத்த விக்னேஷ் சிவனுக்காக தான் நானும் ரவுடிதான் படத்தை தயாரிக்கவே தனுஷ் முன் வந்தது. அப்படி இருக்கும் பட்சத்தில் வந்த வேலையை மறந்துவிட்டு பட்ஜெட்டை பெரிய அளவில் இழுத்து விட்டதால்தான் தனுஷுக்கு கோபம் வந்திருக்கிறது.

இனி பட்ஜெட்டை மீறி ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டேன் என்று தனுஷ் சொல்லிவிடவும் உடனே நயன்தாரா தன்னுடைய பணத்தை போட்டு பட வேலைகளை முடித்து இருக்கிறார். படம் பெரிய ஹிட் என்றாலும் தனுஷுக்கு விக்னேஷ் சிவன் பண்ணிய விஷயம் உறுத்திக் கொண்டே இருந்ததாக பிஸ்மி சொல்லி இருக்கிறார்.

தனுஷின் நியாயமான கோபத்தை புரிந்து கொள்ளாமல் விக்னேஷ் சிவன் மீது இருந்த காதலால் நயன்தாராவும் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தனுஷால் வளர்ந்து பின் அவரிடம் பேச்சுவார்த்தை கூட இல்லாமல் போன சில நட்சத்திரங்களை தங்களுடைய கூட்டத்தில் சேர்த்துக்கொண்டு தனுஷை வெறுப்பேற்றி இருக்கிறார்கள்.

இதுதான் இந்த 10 கோடி வரை பிரச்சனை வருவதற்கு முக்கிய புள்ளி. ஒரு வேலை தனுஷின் கோபம் நியாயமானது அவர் கொடுத்த வாய்ப்பை நாம் சரியாக உபயோகப்படுத்தாமல் விட்டு விட்டோம் என விக்னேஷ் சிவன் கொஞ்சம் இறங்கி போய் இருந்தால் இவ்வளவு பிரச்சனை தேவையில்லை.

- Advertisement -

Trending News