Tamil Cinema News | சினிமா செய்திகள்
விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் கதை இதுதான்.. உலக சினிமாவில் முதல் முறை!
விக்னேஷ் சிவன், சூர்யாவை வைத்து தானாசேர்ந்தகூட்டம் எனும் தோல்வி படத்தை கொடுத்த பிறகு தற்போது வரை எந்த ஒரு படத்தையும் இயக்கவில்லை.
அதற்கு மாறாக நயன்தாராவுடன் ஜாலியாக அவரது படப்பிடிப்பில் ஊர் சுற்றி வருவதாக தெரிகிறது. இந்நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பட அறிவிப்பை வெளியிட்டார்.
விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் எனும் படத்தை இயக்க இருப்பதாக மோஷன் போஸ்டர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஆனால் படம் கிணற்றில் போட்ட கல் போல அப்படியே கிடக்கிறது. இதற்கிடையில் காற்றுவாக்கில் ரெண்டு காதல் படத்தின் கதை இணையதளத்தில் கசிந்துள்ளது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலிக்கும் ஒரு பையன் படும் பாடுதான் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் கதையாம். இதனை காமெடி கலந்து கொடுக்க உள்ளாராம் விக்னேஷ் சிவன்.
ஏற்கனவே நானும் ரவுடிதான் படத்தில் கூட இதே மாதிரியான கதைகளை தேர்ந்தெடுத்து திரைக்கதையில் சுவாரசியங்களை சேர்த்து மிரட்டி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழ் சினிமாவில் ஏற்கனவே அலுத்துப்போன கதையை தான் இவரும் தேர்ந்தெடுத்துள்ளாரா என இப்போதே படத்தின் மீது எதிர்பார்ப்பு குறையத் தொடங்கியுள்ளது.
