சென்னை: பாகுபலி 2 படத்தில் 5 தவறுகள் இருப்பதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் ரிலீஸான மூன்றே நாட்களில் உலக அளவில் ரூ. 540 கோடி வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் பாகுபலி 2 படத்தில் 5 தவறுகள் இருப்பதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவர் சுட்டிக்காட்டியுள்ள 5 தவறுகள்,

ரூ. 120

ரூ. 120

அருமையான படத்தை பார்க்க வெறும் ரூ.120 கட்டணம் வசூலித்தது தவறு. கூடுதல் பணம் அளிக்க ஒரு வசூல் பெட்டி அல்லது தயாரிப்பாளரின் வங்கி கணக்கு எண் அல்லது முகவரியை அளித்திருக்க வேண்டும்.

படம்

படம்

படத்தின் நீளம் மிகக் குறைவு. யாருமே இந்த படம் வெறும் 3 மணிநேரத்தில் முடிவதை யாரும் விரும்பவில்லை.

டூ மச்

டூ மச்

விளக்கங்கள் மற்றும் பர்ஃபெக்ஷன் அதிகம். பெரும்பாலான இயக்குனர்களின் நம்பிக்கை, தலைக்கனம், யோசிக்கும் முறை ஆகியவற்றை சிதறடித்துவிட்டது.

அதிசயம்

அதிசயம்

கன்க்ளூஷன் என்று இருந்திருக்கக் கூடாது. மாறாக மேலும் 10 பாகங்களை சேர்த்தால் திரையில் மேலும் பல அதிசயங்களை விரைவில் காணலாம் என்ற எண்ணம் கிடைத்திருக்கும்.

பெஞ்ச்மார்க் பெஞ்ச்மார்க்

கடினமான நேரம்..கடினமான பெஞ்ச்மார்க் செட் பண்ணப்பட்டுள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் இந்த சாதனையை முறியடிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை.