Connect with us

Cinemapettai

RJ பாலாஜியை இயக்கும் அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன். லைக்ஸ் குவிக்குது நண்பேன் டா ஸ்டேட்டஸ் .

Tamil Cinema News | சினிமா செய்திகள்

RJ பாலாஜியை இயக்கும் அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன். லைக்ஸ் குவிக்குது நண்பேன் டா ஸ்டேட்டஸ் .

ஆர் ஜே பாலாஜி

ஆர் . ஜேவாக பலராலும் அறியப்பட்டவர். கிராஸ் டாக் நிகழ்ச்சி கேட்டு வயிறு குலுங்க சிரிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. சமூக பிரச்சனைகளிலும் ஆர்வம் காட்டினார். புயல் , வெள்ளம் சமயத்தில் தன் நிகழ்ச்சி வாயிலாக மக்களுக்கு உதவி செய்தார். பின்னர் ஜல்லிக்கட்டு, காவேரி மேலாண்மை என தன் அக்கறையை வெளிப்படுத்தினார்.


இவருக்கு சினிமாவில் சிறப்பான பிரேக் த்ரூ கொடுத்தவர் நம் அன்பான இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் “நானும் ரவுடி தான்” படத்தின் வாயிலாக. அதன் பின் தான் இவரின் சினிமா கேரியர் பிஸியானது என்றால் அது மிகையாகாது.

ஆர்.ஜே.பாலாஜி தற்போது ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் எல்கேஜி திரைப்படத்தில் அரசியல்வாதியாக ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளார் படத்தை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார் படத்தை பிரபு இயக்கியுள்ளார். பெரிய படத்துக்கு மட்டும் இல்லாம, கொஞ்சம் சின்ன படத்துக்கும் உதவி பண்ணுங்க ப்ளீஸ் என்று இவர்கள் வெளியிட்ட போஸ்டர்ஸ் லைக்ஸ் குவித்தது.

இலவசமாக கொடுக்க ஆடு, மாடு, மிக்ஸி, கிரைண்டர், பேன், டிவி ஆகியவை வைத்து அசத்தினர் படக்குழு.

விக்னேஷ் சிவன் இயக்கம் மட்டுமன்றி பாடல்கள் எழுதுவதிலும் வல்லவர் தான். இந்நிலையில் பாலாஜி தன் ட்விட்டரில் “சிம்பு, விஜய் சேதுபதி, சூர்யா மற்றும் வருங்காலத்தில் சிவகார்த்திகேயனை இயக்குபவர் என் lkg படத்தில் பாடலை எழுதி அதனை இயக்கியும் உள்ளார். நட்பிற்காக நீங்கள் செய்ததற்கு நன்றி” எனவும் கூறி இருந்தார்.

ஒரு பக்கம் நம் நெட்டிசன்கள் வாழ்த்து சொல்ல, மறுபக்கம் என்ன ப்ரோ காசு வாங்கிலியா எனவும் கேட்க. அட ஆமாம் அவர் வாங்கவில்லை என்று பாலாஜி பதில் தந்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top