Tamil Cinema News | சினிமா செய்திகள்
விக்னேஷ் சிவன் நயன்தாரா கல்யாணம் உறுதி.. ஆனா அதுக்கு முன்னாடி இதை பண்ணனுமாம்!
சினிமா உலகைப் பொருத்தவரை நட்சத்திர ஜோடிகள் பலர் இருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர்கள் என்றால் அஜித் ஷாலினி மற்றும் சூர்யா ஜோதிகா ஜோடி தான்.
இதற்கு அடுத்ததாக தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தது சிம்பு மற்றும் நயன்தாரா ஜோடியை தான். அதன்பிறகு பிரபுதேவா மற்றும் நயன்தாரா ஜோடியை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். கமெண்டில் நாங்க காத்துக் கொண்டிருக்கிறோம் என்று நீ பார்த்தியா எனவும் ரசிகர்கள் பேசுவது உண்டு.
ஆனால் நயன்தாரா நீண்ட காலமாக ஒருவரை அவரது வாழ்க்கையில் காதலிப்பது இதுதான் முதல் முறை என்பதால் கண்டிப்பாக இந்த ஜோடி ஒன்றாக சேர்ந்து விடும் என்றுதான் ஜோதிடர் ஒருவர் கணித்துள்ளார்.
எப்போதுமே தமிழ் சினிமாவில் ஜோசியத்தை நம்பும் சிலரில் நயன்தாரா மிகவும் முக்கியமானவர். அந்த ஜோதிடர் பின்னாளில் நயன்தாரா மிகப் பெரிய ஆளாக வருவார் என கணித்தது சரியாக இருந்ததால் எது செய்தாலும் அவரை கேட்டு தான் செய்வாராம்.
அந்தவகையில் தற்போது அந்த ஜோதிடர் நயன்தாராவை திருநாகேஸ்வரம் கோவிலுக்கு சென்று வர சொல்லி இருக்கிறாராம். அப்படிப் போகவில்லை என்றால் உங்கள் காதல் பாதியிலேயே பிரிந்து விடும் என எச்சரித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இருவரும் மீண்டும் ஆன்மீக பயணம் மேற்கொள்ள இருக்கிறார்களாம். அங்கு சென்று வந்த பிறகு உடனடியாக திருமணம் செய்து கொண்டு தான் மற்ற வேலைகளை பார்ப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
ஒருவழியாக விக்னேஷ் சிவன் நினைத்ததை சாதித்து விட்டார் என கோலிவுட் வட்டாரங்களில் அவரைப் பார்த்து பொறாமை படுகின்றனர்.
