
இந்த ஆண்டு ஆடி மாதம் முடித்ததும் போதும் அடுத்தடுத்து பிரபலங்களின் திருமணம் நடைபெற்ற வருகிறது. சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர், மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இது இணையத்தில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியது.
அதன்பின்பு விஜய் டிவியின் பிரபலம் புகழ் அவருடைய காதலி பென்சியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் விஜய் டிவியில் ராஜா ராணி 2 தொடரில் செந்தில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் பாலாஜி தியாகராஜனுக்கு அண்மையில் திருமணம் முடிந்தது.
Also Read : மகாலட்சுமி, ரவீந்தரை தொடர்ந்த அடுத்த திருமண ஜோடி.. சஸ்பென்ஸ் ஆக திருமணத்தை முடித்த ராஜா ராணி 2 பிரபலம்
தற்போது சிவகார்த்திகேயன் முன்னிலையில் யூடியூப் பிரபலம் ஒருவருக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. அதாவது யூடியூபில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமானவர் விக்னேஷ்காந்த். இவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு படத்தில் நடித்து வெளித்திரையில் அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்த தேவ், நட்பே துணை, நெஞ்சமுண்டு நேர்மை உண்டு, மெஹந்தி சர்க்கஸ் போன்ற படங்களில் விக்னேஷ்காந்த் நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இன்று திருமணம் நடந்துள்ளது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளார்.
RJ விக்னேஷ் தாலிக்கட்டும் தருணம்

Also Read : அவரு கூப்பிட்டாருனு என் இமேஜை கெடுத்துக்க முடியாது.. ரஜினியுடன் நடிக்க மறுத்த சிவகார்த்திகேயன்
தற்போது பட வேலைகளில் பிஸியாக இருந்தும் சிவகார்த்திகேயன் இவரது திருமணத்தில் பங்கேற்றது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. மேலும் திருமணத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் காந்த் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விக்னேஷ்காந்த் ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
பொருத்தமான ஜோடி RJ விக்னேஷ்

Also Read : ஹீரோவாகும் ராஜா ராணி சீரியல் நடிகர்.. அடுத்த சிவகார்த்திகேயன் என பில்ட்டப் பண்ணும் நடிகர்
சிவகார்த்திகேயன் முன்னிலையில் RJ விக்னேஷ்க்கு டும் டும் டும்

RJ விக்னேஷ்க்கு வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
