இஸ்ரேலை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் கண்ணீர் மல்க செய்தி வாசித்த வீடியோ மக்கள் மத்தியில் வைரலாக பரவியுள்ளது.

இஸ்ரேலில் உள்ள Israel Broadcasting Authority (IBA) என்ற செய்தி நிறுவனம் கடந்த 45 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

தற்போது அந்நாட்டில் புது செய்தி நிறுவனங்கள் வரவிருப்பதால், IBA நிறுவனம் மூடப்படுகிறது என நிதி அமைச்சகம் அறிவித்தது.

இந்நிலையில், IBA- யில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய Geula Even, தனது இறுதி செய்தி வாசிப்பின் போது கண்ணீர் சிந்தியுள்ளார்.

நேரலையில் செய்தி வாசித்த இவர், பல ஆண்டுகளாக இந்த செய்தி நிறுவனம் எனது தொழில்சார்ந்த வீடாக இருந்தது. இங்கு பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகள் மற்றும் பல நல்லதொரு சூழ்நிலைகளையும் சந்தித்துள்ளேன்.

தற்போது இதுதான் எனது இறுதி நிகழ்ச்சி, எங்கள் நிறுவனம் மூடப்படுவதால் பலபேர் வேலை இழக்கவுள்ளோம் என கண்ணீர் மல்க நேரலையில் செய்தி வாசிப்பின் போது கூறியுள்ளார்.