சிவாஜி கணேசன், பத்மினி நடித்த ‘வியட்நாம் வீடு’ படத்திற்கு திரைக்கதை எழுதிய பிரபல திரைக்கதையாசிரியரும், இயக்குனருமான ‘வியட்நாம்வீடு’ சுந்தரம் இன்று காலை 6 மணிக்கு சென்னை தி.நகரில் காலமானார். 73 வயதான சுந்தரம் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வியட்நாம் வீடு’ படத்தை அடுத்து சிவாஜி கணேசன் நடித்த ஞான ஒளி’, ‘அண்ணன் ஒரு கோவில், எம்.ஜி.ஆர் நடித்த ‘நான் ஏன் பிறந்தேன்’, ‘நாளை நமதே’, உள்பட பல படங்களுக்கு திரைக்கதை எழுதியதோடு, ‘கெளரவம்’, விஜயா’, ‘தேவிஸ்ரீ கருமாரியம்மன், ‘ஞானப்பறவை’ போன்ற படங்களை இயக்கியும் உள்ளார்.

அதுமட்டுமின்றி ஏராளமான டிவி சீரியல்களுக்கும் திரைக்கதை எழுதி இயக்கியுள்ள வியட்நாம் வீடு’ சுந்தரம் இளையதலைமுறை இயக்குனர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.