ஆரம்பத்தில் விடுதலைக்கான கதை இதுதான்.. சூரியால் மாறிய மொத்த ஸ்கிரிப்ட்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான விடுதலை படம் சக்கை போடு போட்டு வருகிறது. வெற்றிமாறனின் முந்தைய படங்களை காட்டிலும் விடுதலை படம் மிகவும் வித்தியாசமாக அமைந்திருந்தது. மேலும் சூரியன் நடிப்பும் அபாரம்.

இப்போது விடுதலை படத்திற்கு தொடர்ந்து நேர்மையான விமர்சனங்கள் கிடைத்து வருவதுடன் வசூலும் அள்ளுகிறது. இந்நிலையில் வெற்றிமாறன் விடுதலை படம் உருவானதை பற்றி பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார். ஆரம்பத்தில் வெற்றிமாறன் எழுதிய கதையே வேறொன்றாக இருந்துள்ளது.

அதாவது எந்த கனவும் இல்லாத சாதாரண மனிதன் தினம்தோறும் எப்படி பயணிக்கிறான். ஒவ்வொரு நாளும் முடிந்த பின்பு அடுத்த நாளை எதிர்நோக்கி இருக்கும் எளிய மனிதனின் கதையாக நான் தயார் செய்து வைத்திருந்தேன். அதனால் தான் இந்த படத்திற்கு கதாநாயகனாக சூரியை தேர்ந்தெடுத்தேன்.

இந்த கதையைப் பற்றி சூரியிடம் பேசும் போது தான் எனக்கு நிறைய யோசனைகள் வந்தது. அவருடைய உடம்பு போலீஸ் அதிகாரிக்கான தோரணையில் பிட்டாக இருந்தது. மேலும் சூரியின் ஆர்வம் மற்றும் உத்வேகம் கதையில் பல மாற்றங்களை கொண்டு வர உதவியது. இதனால் படமும் வேற லெவலில் வந்திருந்தது.

விடுதலை படத்திற்காக சூரி கடின உழைப்பு போட்டுள்ளார் என வெற்றிமாறன் கூறியிருந்தார். மேலும் இதுவரை காமெடி நடிகராக மட்டுமே கலக்கி வந்த சூரி கதாநாயகனாகவும் தன்னை நிரூபித்து உள்ளார். மேலும் விடுதலை படத்திற்காக சில வருடங்களாக எந்த படத்திலும் அவரால் நடிக்க முடியாமல் போனது.

அதற்கெல்லாம் ஈடுகட்டும் விதமாக விடுதலை படம் தரமான ஒரு ஹிட் படமாக அமைந்துள்ளது. விடுதலை படத்தின் இரண்டாம் பாகமும் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இந்தப் படத்தில் கிடைத்த வரவேற்பின் மூலம் சூரிக்கு அடுத்தடுத்த ஹீரோ தொடர்ந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்