என்னது மீண்டும் மீண்டுமா.. கன்னித்தீவு போல இழுத்துக் கொண்டே செல்லும் விடுதலை 2 சூட்டிங்

Viduthalai 2 Shotting: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்த விடுதலை கடந்த வருடம் வெளியானது. இதில் கௌரவத் தோற்றத்தில் நடிப்பதற்கு தான் விஜய் சேதுபதி கமிட்டானார். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய கதாபாத்திரம் நீட்டிக்கப்பட்டு தற்போது இப்படம் இரண்டாம் பாகம் ஆகவும் உருவாகி இருக்கிறது.

ஏற்கனவே மாத கணக்கில் படப்பிடிப்பை நடத்தி வந்த வெற்றிமாறன் மீண்டும் பார்ட் 2வுக்காக சூரி, விஜய் சேதுபதியின் கால்ஷீட்டை வாங்கி இருந்தார். அதைத்தொடர்ந்து சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது வெடிவந்துள்ள தகவல் மாரடைப்பையே வரவைத்து இருக்கிறது.

அதாவது இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு இன்னும் 30 நாட்கள் நடைபெற இருக்கிறதாம். விஜய் சேதுபதிக்கு மிகவும் கனமான கதாபாத்திரம் என்பதால் வெற்றிமாறன் பார்த்து பார்த்து செதுக்கி வருகிறாராம். மேலும் 3 பவர்ஃபுல்லான சண்டை காட்சிகளும் அவருக்கு இருக்கிறது.

Also read: வாடிவாசலை நம்பி பிரயோஜனம் இல்ல.. கலைப்புலி தாணு துண்டு போட்ட 4 படங்கள்

அது மட்டுமல்லாமல் விஜய் சேதுபதியின் ஃபிளாஷ்பேக் காட்சிகளுக்காக டி ஏஜிங் தொழில் நுட்பமும் செய்யப்பட இருக்கிறது. இப்படிப்பட்ட காரணங்களால் தான் விடுதலை 2 சூட்டிங் நீட்டிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே முதல் பாகம் இரண்டாம் பாகத்திற்கான பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. அதற்காகவே காத்திருக்கும் ரசிகர்கள் தற்போது படத்தை சீக்கிரம் முடித்து ரிலீஸ் செய்யுங்கள் என கதறி வருகின்றனர். ஏனென்றால் சூர்யாவின் வாடிவாசல் விடுதலையால் தான் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

இதற்காக காத்திருந்து நொந்து போன சூர்யா தற்போது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் வாடிவாசல் டிராப் என்று கூட செய்திகள் வெளியானது. ஆனால் வெற்றி மாறன் விடுதலையை முடித்துவிட்டு வாடி வாசலில் கவனம் செலுத்த இருப்பதில் உறுதியாக இருக்கிறார்.

Also read: விஸ்வரூபம் எடுக்கும் வாடிவாசல் பஞ்சாயத்து.. சூர்யாவுக்கு பதில் என்ட்ரி ஆகும் ஆஸ்தான நடிகர்

Next Story

- Advertisement -