Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்க்கு அனுப்பிய வீடியோ.. தல சொன்னதை தட்டாமல் செய்த பிரபல நடிகர்

அஜித்க்கு அனுப்பிய வீடியோ
விஸ்வாசம் படத்தின் மூலம் அஜித்துடன் மிக நெருக்கமான ஒரு நண்பராகிவிட்டார் ரோபோ ஷங்கர். சின்னத்திரையில் விஜய் டிவியின் மூலம் அறிமுகமாகி தற்போது அனைத்து முன்னணி நடிகர்களுடன் கலக்கிக்கொண்டிருக்கும் காமெடியன் ரோபோ ஷங்கர்.
அவர் முகபாவனையை பார்த்தாலே நமக்கு சிரிப்பு வந்துவிடும் மற்றும் கவுண்டமணியை போலவே நகைச்சுவையில் திறம் படைத்தவர். ரியாலிட்டி ஷோ மற்றும் காமெடி சொற்களின் மூலம் அறிமுகமான ரோபோ சங்கர் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்றே கூறலாம்.
விஸ்வாசம் படத்தின் போது அஜித் ரோபோ ஷங்கருக்கு பெப்பர் சிக்கன் செய்து கொடுத்துள்ளாராம். அதனுடன் ஒரு கண்டிஷன் போட்டுள்ளார் நீங்களும் இதே போல் சிக்கன் சமைத்து உங்கள் குடும்பத்துக்கு பரிமாறிய வீடியோவை எனக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தல அஜித் சொன்னபின் கேட்காமல் இருப்பாரா அதேபோல் சமைத்து அதன் வீடியோவை அஜித்திற்கு அனுப்பிவைத்துள்ளார். இந்த நட்பு குறைந்த நாட்களில் ஏற்பட்ட நட்பு என்றாலும் ரசிக்கும் வண்ணமாக உள்ளது. திறமை வாய்ந்த இந்த ரோபோ ஷங்கர் மேலும் பல படங்களில் நடித்து வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
