Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

போட்டி முடிந்த பின் புட் பால் ஸ்டைலில் ஜெர்சியை மாற்றிக்கொண்ட வீரர்கள். வீடியோ உள்ளே! ஐபில் 2018

ஐபில்

சம்மர் கொண்டாட்டமான ஐபில் லீக் போட்டிகளின் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ஏற்கனவே சன்ரைசர்ஸ் மற்றும் சென்னை அணிகள் பிளே – ஆப் சுற்றுக்கு தகுதியாகிவிட்டது. டெல்லி டேர்டெவில்ஸ் தவிர்த்து மற்ற ஐந்து அணிகளுக்கும் டாப் நான்கில் தகுதி பெரும் வாய்ப்பு உள்ளது.

MI VS KINGS XI

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் மோதின. முதலில் பேட் செய்த மும்பை போலார்டின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவரில் 186 ரன்கள் குவித்தது. கிங்ஸ் பஞ்சாபின் சேசிங் அருமையாகவே இருந்தது. அருமையாக ஆடிய ராகுல் ஆட்டத்தின் 18 வது ஓவரில் 60 பாலில் 94 ரன் எடுத்து அவுட் ஆனார். அவர் இருந்திருக்கும் பட்சத்தில் பஞ்சாப் தான் போட்டியை வென்றிருக்கும். மேலும் 4 ஓவரில் 15 ரன் கொடுத்து மூன்று விக்கெட் எடுத்து அசத்தலாக பந்து வீசிய பும்ரா ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

ஜெர்சி எக்ஸ்சேஞ்

கால்பந்தாட்டம், ஹாக்கி, ரக்பி போன்ற போட்டிகளில் ஆட்டம் முடிந்த பின் இரு அணிகளின் கேப்டன்களோ, சக வீரர்கள் ஜெர்சி மாற்றிக்கொள்வது இயல்பான ஒன்று. சர்வேதசம் மற்றும் கிளப் போட்டிகளில் இது அன்றாடம் நாடாகும் நிகழ்வு.

எனினும் கிரிக்கெட் மைதானத்தில் இது புதிதான ஒன்று தான். ராகுல் மற்றும் ஹர்டிக் பாண்டியா தங்கள் ஜெர்சியை மாற்றிக்கொண்டனர்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தொடங்கினர்.

பின்னர் இதை பற்றி பேசிய ராகுல் ” புட் பாலில் இது போல நடக்கும். நானும் ஹர்டிக் இருவரும் நல்ல நண்பர்கள். கிரிக்கெட்டிலும் இது போல ஜெர்சி மாற்றும் கலாச்சாரம் நன்றாக இருக்கும் என்று தோன்றியது நாங்கள் முன்பே பேசி வைத்துவிட்டு இது போல செய்யவில்லை. நான் உன் ஜெர்சி கொடு என்றேன், அவனும் என்னுடையதை கேட்ட்க மாற்றிக்கொண்டோம்.” என்று விளக்கமும் அளித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top