Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்த வாரம் அனிதாவின் குறும்படம் கன்ஃபார்ம்.. பாக்க பச்சபுள்ள மாதிரி இருந்துட்டு பண்றதெல்லாம் பஜாரி வேலை!
வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4-ல் அனிதா மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தியின் சண்டைக்கு முடிவில்லாமல் போய்க் கொண்டே இருக்கிறது.
இதற்கிடையில் நேற்று சுரேஷ் சக்கரவர்த்தி குக்கிங் டீமில் இருந்து விலகி பாத்ரூம் கிளீனிங் டீமிர்க்கு சென்றுபின் அனிதாவின் மீது தாறுமாறாக பழி போட்டார்.
அதில் காண்டான அனிதா “ஒரு வார்த்தைய எக்ஸ்ட்ரா சொல்லிட்டேன். அவர் நியூஸ் ரீடர்ன்னு சொல்லல தான், ஆனால் எச்சில் தெறிக்கும் என்று சொன்னதற்கு அதுதான் மீனிங் .
ஆனா, மக்கள் அதெல்லாம் மறந்துடுவாங்க. இப்ப புரோமோவில் வருவதற்காகவே சுரேஷ் இப்படியெல்லாம் என்னை ட்ரிக்கர் பண்றாருன்னு நல்லா தெரியுது” என்று கேமரா முன்னாடி உணர்ச்சி வசப்பட்டு உண்மையை உளறி கொட்டிவிட்டார் அனிதா.
இதையெல்லாம் பார்க்கும்போது இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமலஹாசன் கண்டிப்பாக எச்சி தெறிக்கும் விஷயத்த பெருசாகிவிடுவார்.
அப்படி இருக்கிறப்ப, விசாரணை என்ற பெயரில் யாராவது ஒருத்தர நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காகவே குறும்படமும் இடம் பெறுவது உறுதி என்று ரசிகர்கள் செம ஜாலியா இருக்காங்க.
