Connect with us
Cinemapettai

Cinemapettai

ஒரே சிக்ஸில் ஆஸ்திரேலிய டீம்மை மிரட்டி விட்ட வாஷிங்டன் சுந்தர்! வைரலாகுது வீடியோ

Sports | விளையாட்டு

ஒரே சிக்ஸில் ஆஸ்திரேலிய டீம்மை மிரட்டி விட்ட வாஷிங்டன் சுந்தர்! வைரலாகுது வீடியோ

வாஷிங்டன் சுந்தர் ஸ்கூல், ஏஜ் க்ரூப் கிரிக்கெட் என படிப்படியாக முன்னேறி வந்தவர். 21 வயது ஸ்பின் பௌலிங் ஆல் ரௌண்டர். இந்தியா யூ 19 டீம்மில் ஆடியுள்ளார். எனினும் TNPL இவருக்கு நல்ல பிரேக் த்ரூ பெற்றுத்தந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ், புனே சூப்பர் ஜயன்ட்ஸ் ஆனா சமயத்தில் இவருக்கு ஐபிஎல் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்பு தற்பழித்து ஆர் சி பி டீம்மில் முக்கியாய் நபர்.

சுந்தர் டி 20 டீமில் சேர்க்கப்பட்டார், பின்னர் ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் பந்துவீச்சை எதிர்கொள்ள ப்ராக்டிஸ் வேணும் என்பதனால் நெட் பௌளராக டீமுடன் பயணித்து வந்தார். இந்நிலையில் நான்காவது டெஸ்ட் தடங்கும் முன் ஜடேஜா மற்றும் அஷ்வினுக்கு காயம் ஏற்பட டீமுடன் பயணித்த குல்தீப் யதாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நேரத்தில், டீம் நிர்வாகம் சுந்தருக்கு வாய்ப்பை வழங்கியது. அவரும் சாதித்துவிட்டார். போட்டி நடக்கும் மூன்று நாட்களில் பேட்டிங், பௌலிங் என இரண்டு துறையிலும் கெத்து காட்டியுள்ளார்.

ஆஸி முதல் இன்னிங்ஸில் 31 ஓவர் வீசி 89 ரன் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். அதில் ஸ்மித், லயன் மற்றும் க்ரீன் விக்கெட்டும் அடங்கும். வெளிநாடுகளில் முதல் இரண்டு நாட்களில் ஸ்பின்னர் மூன்று விக்கெட் எடுப்பதென்பது பெரிய விஷயம் தான்.

washington sundar bowling

இன்று பேட்டிங்கில் இந்தியா 189 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து
தடுமாறும் நேரத்தில் சுந்தர் – தாகூர் போட்ட பார்ட்னெர்ஷிப் திருப்புமுனையாக அமைந்தது. இந்த ஜோடி 36 ஓவர்கள் இணைந்து ஆடி 123 ரன்களை குவித்தனர். தாகூர் 115 பாலில் 67 ரன்னும், சுந்தர் 144 பாலில் 62 ரன் எடுத்தனர்.

பேட்டிங் சமயத்தில் அவுட் ஆகும் முன் ஸ்பின்னர் லயன் பாலில் சுந்தர் அடித்த சிக்ஸ் பலரது பாராட்டையும், ஆதரவையும் பெற்றுள்ளது. ஸ்வீப் செய்வது போல முட்டி போட்டு, மிட் விக்கெட் திசையில் அடித்து ஆடினார், இவர் கொடுத்த பவர்புல் ஸ்ட்ரோக் சிக்ஸராக மாறியது. ஆஸ்திரேலிய வீரர்கள் அசந்து போய்விட்டனர். பணத்தை கூட பார்க்காமல், பீல்டர் இல்லை என்பதனால் பலத்தை நம்பி ஆடிய ஷாட் அது.

சிக்ஸரின் வீடியோ லிங்க் இதோ …

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top