கொல்கத்தா நைட ரைடர்ஸ் அணியின் கேப்டன் காம்பீரும் புனே வீரர் மனோஜ் திவாரியும் மீண்டும் ஒரு மைதானத்தில் சண்டையிட்டு கொண்டனர்.

ஐ.பி.எல் பத்தாவது சீசனின் 30வது லீக் போட்டியில் புனே அணியை கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை  கொல்கத்தா அணி துரத்தி கொண்டிருந்த போது புனே வீரரான மனோஜ் திவாரி கொல்கத்தா அணியின் கேப்டன் காம்பீரை ஏதோ கூறியுள்ளார். அதனை கேட்டு கடுப்பான காம்பீரும் பதிலுக்கு ஏதோ கூற இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

 

https://twitter.com/cricketfreak19/status/857288395621634052

 

இதற்கு முன்பாக கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சி தொடரிலும் இரு வீரர்களும் மைதானத்திலேயே சண்டையிட்டு கொண்டது குறிப்பிடத்தக்கது.