Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித் படத்திற்கு வந்த புதிய சிக்கல்.. விடாமுயற்சிக்கு ஆப்பு வைத்த முக்கிய பிரச்சனை

AK 62படத்தின் படப்பிடிப்பானது மே 22ஆம் தேதி தொடங்கி 70 நாட்களில் முடிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.

நடிகர் அஜித்குமாருக்கு சமீபத்திய ரிலீஸ் ஆன துணிவு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தற்போது அவருடைய 62 ஆவது திரைப்படமான விடாமுயற்சி படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டிற்காக அவருடைய ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அஜித்தின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக மே ஒன்று அன்று படத்தின் டைட்டில், படக்குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அடுத்தடுத்து படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற கதாபாத்திரங்கள் யார் என்பது குறித்து அப்டேட்டுகளை தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பானது மே 22ஆம் தேதி தொடங்கி 70 நாட்களில் முடிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. நடிகர் அஜித் 40 நாள் கால்சீட்டை முடித்துவிட்டு தன்னுடைய அடுத்த வேர்ல்ட் டூரை தொடங்கவிருக்கிறார் என்றும் அறிவிப்புகள் வெளியாகின.

Also Read:AK-62, விக்னேஷ் சிவனை ஒதுக்க காரணமாய் இருந்த 5 விஷயங்கள்.. அஜித்தை இப்படி சங்கடப்படுத்தி இருக்காரே!

தற்போது படக்குழு திட்டமிட்ட அத்தனை பிளானுக்கும் ஆப்பு வைக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த தகவலின் படி பார்த்தால் சொன்ன தேதியில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிப்பது சந்தேகம் என்பது போல் தெரிகிறது. ஏற்கனவே இந்த படம் ஜனவரியில் ஆரம்பிக்கப்பட வேண்டிய ஒன்று. எதிர்பாராத சூழ்நிலைகளால் நாட்கள் கடந்து மே மாதத்தில் ஆரம்பிப்பதாக இருந்தது.

விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் தான் இந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமான லைக்காக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி இருக்கிறது. இதனால் லைக்கா சம்பந்தப்பட்ட அத்தனை பணப்பரிவர்த்தனைகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டு இருக்கிறது.

Also Read:கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல.. அஜித் படத்தில் விலகியதைப் பற்றி பெரிய கதையாக உருட்டும் விக்னேஷ் சிவன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் போல் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட படம் என்றால் பண பரிவர்த்தனைகளை சரி கட்டி விடலாம். ஆனால் இது புதிதாக ஆரம்பிக்கப்பட வேண்டிய படம் என்பதால், தற்போதைக்கு லைக்காவால் எந்த ஒரு பண பரிவர்த்தனையும் செய்ய முடியாது. இதுதான் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்க காலதாமதம் ஆகுவதற்கு காரணமாக இருக்கப் போகிறது.

இப்போது வந்திருக்கும் இந்த தகவல் அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகளை முக்கால்வாசி முடிந்த நிலையில், அஜித்தின் படம் மட்டும் இன்னும் தொடங்கப்படாமல் இருப்பதே ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையாக இருந்தது, தற்போது குறிப்பிட்ட தேதியில் படப்பிடிப்பு வேலைகளை தொடங்க முடியாமல் போவதும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

Also Read:4 வருடத்திற்கு முன்பே அந்த படத்தில் விக்னேஷ் சிவனை கழட்டிவிட்ட லைக்கா.. அப்ப இது புதுசு இல்லையா?

Continue Reading
To Top