ஒரு நிலையில் இல்லாத விடா முயற்சி.. விடாத பணத்தாசையில் எல்லாத்தையும் இழக்கும் அஜித்குமார்

ஆரம்பத்தில் இருந்தே அஜித்தின் ஏகே 62 படத்தில் பல சிக்கல்கள் இருந்து வருகிறது. முதலில் விக்னேஷ் சிவன் இந்த படத்தின் இயக்குனர் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் அதிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு மகிழ்திருமேனி இந்த படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார்.

அதன்படி அஜித்தின் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி விடாமுயற்சி என்ற டைட்டிலுடன் லைக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஆனால் டைட்டில் வைத்ததில் இருந்து இன்று வரை படம் தொடங்கவே இல்லை.

Also Read : மோடியின் நண்பருடன் கைகோர்த்த மறைமுகமாக அஜித் செய்யும் வேலை.. ஆச்சரியத்தில் திரையுலகம்

மேலும் போதாக்குறைக்கு லைக்கா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இதனால் பண பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு தொடங்காமல் இருக்கிறது. இந்த நேரத்தில் விடாமுயற்சி படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்ற முயற்சி செய்து வருகிறதாம்.

ஆனால் ஏற்கனவே லைக்கா விடாமுயற்சி படத்தில் நடிக்க அஜித்துக்கு 105 கோடி சம்பளம் பேசி இருந்தனர். இப்போது சத்யஜோதி பிலிம்ஸ் அஜித்துக்கு 90 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அஜித் இந்த சம்பளத்துக்கு ஒத்து வந்தால் மட்டுமே சத்யஜோதி பிலிம்ஸ் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும்.

Also Read : 5 கோடி கடன் இருந்த போதும் அப்படி நடிக்க மாட்டேன்.. வீடு தேடி வந்த 2 கோடி பணத்தை தூக்கி எறிந்த அஜித்

இல்லையென்றால் லைக்கா வரும் வரை காத்திருக்க வேண்டும். ஆகையால் அஜித்தின் கையில் தான் தற்போது எல்லாமே இருக்கிறது. லைக்காவுக்காக காத்திருந்தால் இன்னும் பல மாதம் விடாமுயற்சி படம் இழுத்தடிக்க வாய்ப்பு இருக்கிறது.

அஜித்தின் விடாத பண ஆசையால் எந்த முடிவும் எடுக்காமல் மௌனம் சாதித்து வருகிறார். அஜித் 90 கோடி சம்பளத்திற்கு ஒத்துக்கொண்டால் உடனே சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தொடங்குவதற்கான வேலையை ஆரம்பித்து விடும். இன்னும் ஒரு வாரத்தில் என்ன நிலைமை என உறுதியாக தெரிந்துவிடும் என கூறப்படுகிறது.

Also Read : பார்ட்டியில் யாஷிகாவுடன் இறுக்கி அணைச்சு ஒரு முத்தா.. சர்ச்சையை கிளப்பிய அஜித் மச்சான் புகைப்படம்