• பிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் காரியத்தை பிடித்ததாக மாற்றிக் கொள்ளுங்கள். விரைவில் நீங்களே ஒரு மாற்றத்தை உணர்வீர்கள்.

• வாழ்க்கையில் எதற்கும் பயப்படாதீர்கள். வேலை பாதுகாப்பு என்பதை கருதி ஒரே இடத்தில் இருந்து விடாதீர்கள். புதிய முயற்சிகளால் மட்டுமே முன்னேற்றத்தை உணர முடியும்.

• மற்றவர்களையும் உங்களுக்காக உழைக்க வைக்கும் புத்திசாலித்தனம் இருந்தால் மட்டுமே நல்ல ஒரு லீடர் ஆக முடியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். • கீழே விழுவது வேகமாக எழுவதற்காகவே, அதனால் விழுவதைப் பற்றி கவலைபடாதீர்கள். அது வெற்றியின் ஏணிப்படி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

• வெற்றிக்கு நேரம் அவசியம் என்பதால், நேரத்தை உருப்படியாக செலவிட தெரிந்து கொள்ளுங்கள்.

• எதற்கும் கவலைபடுவதை விட்டுவிட்டு எப்பொழுதும் பாசிடிவ் எண்ணங்களுடன் இருங்கள்.

• வெற்றிக்கான முதல் சாவி உழைப்பு தான், அதனால் தினமும் குறைந்தது 10 முதல் 12 மணி நேரம் உழையுங்கள்