fbpx
Connect with us

4 முன்னணி இயக்குனர்கள் இணையும் வெப் சீரிஸ்- சிவகார்த்திகேயன் வெளியிட்ட போஸ்டர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

4 முன்னணி இயக்குனர்கள் இணையும் வெப் சீரிஸ்- சிவகார்த்திகேயன் வெளியிட்ட போஸ்டர்

இன்றையை லேட்டஸ்ட் ட்ரெண்ட் OTT தளங்கள் என்ற நிலை வந்துவிட்டது. சினிமா பக்கம் மட்டுமே கவனம் செலுத்திய பல கோலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் இந்தப்பக்கம் திரும்பி விட்டார்கள்.

அமேசான் தளத்தில் நான்கு முன்னணி இயக்குனர்கள் இயக்கிய “புத்தம் புதிய காலை” சமீபத்தில் வெளியானது. அடுத்ததாக மணிரத்தினம் தயாரிப்பில் ஒன்பது நபர்கள் இணையும் ‘நவரசா’ விரைவில் நெட் பிலிக்சில் வருகின்றது.

ott-directors-movies-cinemapettai-1

ott-directors-movies-cinemapettai-1

இந்நிலையில் சில நாட்களாகவே ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன #WhoIsTheVictim ஹாஷ்டாக் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களான வெங்கட் பிரபு, பா. ரஞ்சித், ராஜேஷ் மற்றும் சிம்பு தேவன் ஆகியோர் ஒன்றிணைந்து ” விக்டிம் ” எனும் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளனர்.

victim poster

இதனை சிவகார்த்திகேயன் அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்திலிருந்து தெரிவித்துள்ளார். வெங்கட் பிரபுவின் ப்ளாக் டிக்கெட் மற்றும் டில்லி பாபுவின் அக்செஸ் பிலிம் பாக்டரி தயாரிக்கின்றனர்.

விரைவில் மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்சீரிஸ் இல்லாமல் சினிமா என்ற அறிவிப்பு கூட இருந்தாலும் இருக்கலாம். காத்திருப்போம்.

Continue Reading
To Top