Reviews | விமர்சனங்கள்
4 இயக்குனர்கள் வெவ்வேறு கோணத்தில், விக்டிம் விமர்சனம்.. பா ரஞ்சித் நீங்க வேற லெவல்
ரஞ்சித், சிம்புதேவன், வெங்கட் பிரபு, ராஜேஷ் ஆகிய நான்கு இயக்குனர்களின் ஆந்தாலஜி தொகுப்பு தான் இந்த விக்டிம். சோனி ஓடிடி தளத்தில் நேரடி ரிலீஸ் ஆகியுள்ளது.
தமம் – மண் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் தான் இந்த ரஞ்சித்தின் படத்தில். புத்தர் சிலை, மீனை பிடிக்க துடிக்கும் சிறுமி என தான் சொல்ல வரும் அரசியிலுக்கு ஏற்ற அறிமுகத்தை கொடுக்கிறார். சிறிய நிலம் வைத்துள்ளவர்கள் படும் அவஸ்தை நம் கண் முன்னே வந்து போகிறது. உயிரை காப்பதை காட்டிலும் எடுக்க துடிக்கும் மக்கள் தான் இங்கு அதிகம். ஒளிப்பதிவு படத்திற்கு ஸ்பெஷல், குரு சோமசுந்தரம், கலையரசன், ஜானி என பழக்கப்பட்ட நடிகர்கள் தான்.
மொட்டை மாடி சித்தர்– பாண்டஸி, காமெடி என தனக்கு பழக்கப்பட்ட கதை களத்தை எடுத்துள்ளார் சிம்புதேவன். நாசர் மற்றும் தம்பி ராமையா காம்போ இப்படத்தை சுவாரஸ்யம் ஆக்குகிறது. இறுதியில் யார் ஏமாற்றப்பட்டார்கள், யார் ஏமாந்தவர் என கிளைமாக்சில் சொல்லி முடிப்பது சிம்புதேவனுக்கே உள்ள ஸ்பெஷல் டச்.
மிராஜ் – ராஜேஷின் படம் ஹாரர் ஜானர் போல ஆரம்பிக்கிறது. பிரியா பவானி ஷங்கர் மற்றும் நட்ராஜ் இதில். சென்னையில் காட்டேஜில் ஒரு நாள் இரவு என்ன நடக்கிறது என்பதனை படமாகியுள்ளார். எனினும் சில நிமிடங்களில் இது ஹாரர் அல்ல எதோ சைக்கலாஜிக்கல் திரில்லர் தான் எடுக்க முயற்சித்துள்ளார் என்பது எளிதில் புரிந்து விடுகிறது நமக்கு.
கன்பஷன் – வெங்கட் பிரபுவின் ஸ்டைலிஷ் மேக்கிங்; அமலா பால் மற்றும் பிரசன்னா தான் ப்ளஸ். இரட்டை வாழ்க்கை வாழ்வதை பற்றி பேசியுள்ளார் இயக்குனர். தனித்து இருக்கும் அமலாபால், அவளை கொலை செய்ய வருகிறார் பிரசன்னா. இந்த ஒன் லயன் கதையில் இரண்டு ட்விஸ்ட் வைத்து இயக்கியுள்ளார். மங்காத்தா விளையாட்டை போல இதுவும் சுவாரஸ்யம் தான்.
சினிமாபேட்டை அலசல்– அதீத சூப்பர் என்றோ அல்லது செம்ம மொக்கை என இப்படத்தை சொல்லிவிட முடியாது, தாராளமாக ஒருமுறை பார்க்கலாம். இயக்குநர்களின் கதைக்களம் படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ். இன்றைய தேதிக்கு ஓடிடி என்பது சாமானியனும் பார்க்கும் விதத்தில் எளிதாகி விட்டது, எனவே இப்படம் ஓகே தான். முதல் மற்றும் கடைசி படம் கட்டாயம் அனைவரின் பாராட்டையும் பெரும்.
சினிமாபேட்டை ரேட்டிங் 2 .75 / 5
