Ranam Aram thavarel movie Review- காவல்துறைக்கு தண்ணி காட்டும் கொடூர மரணங்கள்.. அறம் ரணம் தவறேல் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

Ranam Aram thavarel movie Review: வளர்ந்து வரும் நாயகனாக இருக்கும் வைபவ் தன்னுடைய 25 ஆவது படமான ரணம் அறம் தவறேல் படத்தை முழுமையாக நம்பி இருக்கிறார். ஷெரிப் இயக்கத்தில் நந்திதா ஸ்வேதா, தான்யா, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பல நடித்து இருக்கும் இப்படம் இன்று வெளியாகி உள்ளது. இதன் விமர்சனத்தை பற்றி இங்கு காண்போம்.

நகரின் பல இடங்களில் மனித உடல் பாகங்கள் தனித்தனியாக எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்படுகிறது. கை, கால், உடம்பு என அனைத்து பாகங்களையும் காவல்துறை சோதனை செய்கிறது. ஆனால் இந்த வழக்கு அவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் நிலையில் நாயகன் வைபவ் உதவி செய்ய முன் வருகிறார்.

இதற்கிடையில் இந்த வழக்கை விசாரித்து வந்த இன்ஸ்பெக்டர் காணாமல் போகிறார். அதனால் தான்யா வைபவுடன் இணைந்து உண்மையை கண்டறிய முயற்சிக்கிறார். ஆனால் இந்த வழக்கு அவர்களுக்கே தண்ணி காட்டும் நிலையில் பல எதிர்பாராத உண்மைகளும் வெளிவருகிறது.

Also read: இந்த வார டிஆர்பி-யில் டாப் 6 லிஸ்டில் ஏற்பட்டிருக்கும் அதிரடி மாற்றம்.. சன் டிவியை திணறடித்த விஜய் டிவி

இந்த கொலைகளை செய்தது யார்? இந்த வழக்கில் நந்திதா ஸ்வேதா எப்படி சம்பந்தப்பட்டார்? வைபவ் குற்றவாளியை நெருங்கினாரா? போன்ற பல கேள்விகளுக்கு த்ரில்லர் பாணியில் விடையளித்திருக்கிறது இப்படம். இதன் ட்ரெய்லரை பார்க்கும்போதே ராட்சசன் படம் அளவுக்கு மிரட்டலாக இருந்தது.

அதனாலேயே இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் வைபவ் கதையின் நாயகனாக தன் பங்களிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். இயக்குனர் கதையை முதல் பாதியில் கொண்டு சென்ற விதமும், அடுத்து என்ன என எதிர்பார்க்க வைத்த காட்சிகளும் நிச்சயம் பாராட்டுதலுக்குரியது. ஆனால் அந்த பரபரப்பு இரண்டாம் பாதியில் தொய்வடைவது பலவீனம்.

அதேபோல் நந்திதா ஸ்வேதாவுக்கு அழுத்தமான கதாபாத்திரமாக இருந்தாலும் பல இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பின்னணி இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக இருந்தாலும் இரண்டாம் பாதி சோர்வடைய வைத்திருக்கிறது. ஆனாலும் சஸ்பென்ஸ் க்ரைம் விரும்பிகளுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும். ஆக மொத்தம் அறம் ரணம் தவறேல் – ஒரு முறை பார்க்கலாம்.

Also read: இந்த வாரம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட 6 ஹிட் படங்கள்.. அஜித்துக்கு ஒரு பில்லானா, விஜய்க்கு என்ன தெரியுமா?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்