Connect with us
Cinemapettai

Cinemapettai

veyil

Tamil Cinema News | சினிமா செய்திகள்

3 வருடத்தில் டைவர்ஸ் ஆனா வெயில் பட பிரியங்கா.. மகனுடன் ஸ்டைலிஷாக வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படம்

தமிழ் சினிமாவில் வெயில் படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா. அதன்பிறகு தமிழில் பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்தார். ஆனால், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த பிரியங்கா சரியான பட வாய்ப்புகள் அமையாததால் மலையாள சினிமா பக்கம் தாவினார்.

சமீபத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வெங்கட்பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்திருந்தார். தற்போது மீண்டும் தமிழில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் சிறப்பு என்னவென்றால் ஒருவர் மட்டுமே நடிக்கும் படமாகும்.

ஒருவர் மட்டுமே நடிக்கும் படங்கள் அவ்வபோது சோதனை முயற்சியாக வெளிவரும். தமிழில் கடைசியாக பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு படம் இந்த வகையை சேர்ந்தது. இப்படம் பல விருதுகளை வென்றது. அதேபோன்ற ஒரு படத்தில் தான் தற்போது வெயில் பிரியங்கா நடித்து வருகிறார்.

தமிழ், மலையாளத்தில் தயாராகும் இந்த படத்தை அபிலாஷ் புருஷோத்தமன் தயாரித்து, இயக்குகிறார். பிரதாப் நாயர் ஒளிப்பதிவு செய்கிறார், தீபன்குரன் கைதப்ரம் இசை அமைக்கிறார். இப்படம் குறித்தும் பேசிய பிரியங்கா கூறியதாவது, ஒற்றை கதாபாத்திர திரைப்படங்கள் சினிமாவில் மிகவும் அரிதானவை.

priyanka

priyanka

சவாலானது என்றாலும் அதை செய்வது ஒரு கலைஞருக்கு மன திருப்தியை அளிக்கும். மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிராணா என்ற படத்தில் நித்யா மேனன் நடித்திருந்தார்.

priyanka

priyanka

இந்த படம் இந்தியாவில் 6 வது படமாகும். ஒரு இக்கட்டான சூழ்நிலை ஒன்றை ஒரு பெண் சந்திக்கும்போது அவள் தன்னை காப்பாற்றிக்கொள்ள என்னவெல்லாம் செய்கிறாள் என்பதுதான் படத்தின் கதை. படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது என கூறியுள்ளார்.

இப்படி சினிமாவில் பிசியாக நடித்து வரும் பிரியங்கா காதல் திருமணம் செய்துகொண்டார். ஆனால் 3 வருடத்திற்கு பிறகு விவாகரத்து பெற்றனர். தற்போது 8 வயது மகனுடன் பிரியங்கா வாழ்ந்து வருகிறார். தற்போது இவர்கள் இருவரும் இருக்கும் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
To Top