fbpx
Connect with us

Cinemapettai

வெயில் படத்தில் அண்ணன் தம்பியாக நடிக்க இருந்தவர்கள் இந்த முன்னணி நடிகர்களா? நடிச்சிருந்தா வேற லெவல்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெயில் படத்தில் அண்ணன் தம்பியாக நடிக்க இருந்தவர்கள் இந்த முன்னணி நடிகர்களா? நடிச்சிருந்தா வேற லெவல்!

ஆல்பம் என்ற மிகப்பெரிய தோல்வி படத்திற்குப் பிறகு வசந்த பாலன் இயக்கத்தில் மிகவும் சுவாரசியமான திரைப்படமாக வெளியாகி எதார்த்தமாக பெரிய அளவில் ஹிட்டடித்த திரைப்படம்தான் வெயில்.

வசந்தபாலனின் குருவான ஷங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த படத்தை தயாரித்து இருந்தார். ஜிவி பிரகாஷ் முதல் முதலாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆனதும் இதே படத்தில் தான்.

பசுபதி, பரத், பாவனா, ஸ்ரியா ரெட்டி, பிரியங்கா போன்றோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் வெயில். இந்த படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்த நடிகர்களின் பெயரை கேட்டால் ஆச்சரியமாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாக இருந்தாலும் தனக்கென ஒரு பாதையை உருவாக்கி மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்கள் இருவருமே முன்னாள் நடிகர் சிவகுமாரின் மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் வெயில் படத்தின் தயாரிப்பாளரான சங்கர், சூர்யா மற்றும் கார்த்தி நடித்த இந்த படம் நன்றாக இருக்கும் என தெரிவித்தாராம். அப்போதுதான் கார்த்தி பருத்திவீரன் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் வசந்தபாலன் விடாப்பிடியாக பசுபதி மற்றும் பரத் ஆகிய இருவரும்தான் வேண்டுமென ஒற்றைக்காலில் நின்று அந்த படத்தை சூப்பர் ஹிட் படமாக மாற்றி விட்டார். வெயில் படம் சிறந்த படத்திற்கான ஃபிலிம்ஃபேர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

சூர்யா மற்றும் கார்த்தி நடித்திருக்கும் இந்த படம் இன்னும் பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கும் என்பதை மட்டும் மறுத்துவிட முடியாது.

Continue Reading
To Top