செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

கெட்டி மேளம் கொட்டியாச்சு வைஷ்ணவி கழுத்தில் தாலி கட்டியாச்சு.. சிறகடிக்கும் ஆசை சீரியலின் வெற்றி வசந்த் திருமணம்

Vijay Tv Serial: வெற்றி வசந்த் என்கிற முத்து சிறகடிக்கும் ஆசை சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து விஜய் டிவியின் நாயகனாக மக்கள் மனதை கொள்ளை அடித்திருக்கிறார். அதேபோல சின்ன சின்ன கேரக்டர் மூலம் விஜய் டிவி சீரியலில் அறிமுகமான வைஷ்ணவி தற்போது பொன்னி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த சமயத்தில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட காதல், கல்யாணத்தில் முடியும் விதமாக இரண்டு பேருக்கும் கெட்டி மேளம் கொட்டும் நேரம் வந்தாச்சு. அதாவது இவர்கள் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் கொடுத்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

vetri vasanth vaishanvi marriage
vetri vasanth vaishanvi marriage

அதனை தொடர்ந்து சங்கீத் பங்க்ஷனும் இரு தினங்களுக்கு முன் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் இன்று இவர்கள் இருவருக்கும் உறவினர்கள் முன்னிலையில் சென்னையில் வைத்து கெட்டி மேளம் கொட்டி வைஷ்ணவி கழுத்தில் தாலி கட்டி வெற்றியின் வசந்தின் திருமணம் நல்லபடியாக முடிந்து விட்டது.

vettri vasanth (2)
vettri vasanth (2)

இதனை தொடர்ந்து இவர்களுடைய வரவேற்பு மிகப்பெரிய அளவில் நண்பர்களுடன் கோலாகலமாக நடைபெறப்போகிறது. இவர்களுடைய திருமண வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவர்களுடைய பந்தம் இனிதாக தொடர வேண்டும் என்று வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

- Advertisement -

Trending News