வேட்டையன் கவின்,ரம்யா நம்பீசன் நடிக்கும் படத்தின் கதை இது தான்?

சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் கவின். இவர் முதன் முதலாக வெள்ளித்திரையில் அறிமுகமாகும் படம் நட்புன்னா என்னான்னு தெரியுமா?.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கின்றார், இப்படம் மூன்று நண்பர்கள் பற்றிய கதையாம்.

இதில் ஒரு நண்பர் காதலில் விழ, பிறகு அவர்கள் வாழ்க்கையில் வரும் இன்பம், துன்பம், மோதல் பற்றிய கதையாம். கண்டிப்பாக காமெடிக்கு புல் கேரண்டி என படக்குழு தெரிவித்துள்ளது.

அதிலும் படத்தின் கடைசி 20 நிமிடம் காமெடிக்கு பஞ்சம் இருக்கதாம். வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காட்சிகள் இருக்கும் என கூறுகின்றனர்.

Comments

comments