ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

இணையத்தில் ட்ரெண்டாகும் வேட்டையன் டிசாஸ்டர்.. விஜய் பேன்ஸ் வேலையா.?

Rajini: முன்பெல்லாம் தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்துவிட்டு தான் விமர்சனத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவார்கள். ஆனால் இப்போது படம் வெளியாவதற்கு முன்பே படத்தைப் பற்றிய நிறைய விமர்சனங்கள் வரத் தொடங்கி விடுகிறது. அதுவும் சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

இதனால் சக நடிகர்களுக்குள் போட்டி போட்டுக் கொண்ட ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். அந்த வகையில் நாளை ரஜினியின் வேட்டையன் படம் ரிலீஸ் ஆகப்போகிறது. ஆனால் இன்று எக்ஸ் தளத்தில் வேட்டையன் டிசாஸ்டர் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது.

விஜய் ரசிகர்கள் செய்யும் வேலைதான் இது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஏனென்றால் இதற்கு முன்னதாக விஜய்யின் கோட் படம் வெளியான போது இதே போல் ரஜினி ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை அந்த படத்திற்கு கொடுத்து வந்தனர்.

வேட்டையன் டிசாஸ்டர் என இணையத்தில் ட்ரெண்டிங்

அதேபோல் வேட்டையன் படம் வருவதற்கு முன்பே விஜய் ரசிகர்கள் இந்த படம் தோல்வி பெற போகிறது என கூறி வருகிறார்கள். அதோடு படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இப்போதும் பல தியேட்டர்களில் டிக்கெட் விற்காமல் இருக்கிறது என ஸ்க்ரீன் ஷாட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் இயக்குனர் டிஜே ஞானவேல் சில பேட்டிகளில் பேச்சு தடுமாறுவதாக வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்கள். வேட்டையன் படம் புக்கிங் ஸ்டேட்டஸ் தமிழ்நாட்டில் நடுநிலையாகவும், ஓவர்சீஸ் மோசமாகவும்,தெலுங்கு மற்றும் கேரளா போன்ற இடங்களில் போனியே ஆகவில்லை என்று கூறி இருக்கின்றனர்.

மேலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களிலும் வேட்டையன் படத்தில் டிக்கெட் புக் ஆகவில்லை என கூறியுள்ளனர். ஆனால் நாளை படம் வெளியானால் தான் வேட்டையன் படம் குறித்து தெளிவான விமர்சனம் கிடைக்கும்.

- Advertisement -spot_img

Trending News