vetrivel-movie-reviewசசிக்குமார் – மியா ஜார்ஜ் நிகிலாவிமல் உள்ளிட்டோர் இணைந்து நடித்து டி.இமான் இசையில், வசந்த மணி எனும் புதியவர் இயக்கத்தில் ரவீந்திரன் – அப்துல் லத்தீப் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படமே ‘வெற்றிவேல்.’

கதைப்படி , வெற்றிவேல் – சசிக்குமாரும், புதுமுகம் சரவணனும் அந்த ஊர் வாத்தியார் இளவரசு வீட்டு வாரிசுகள். தம்பியின் காதலுக்காக களம் இறங்கும் வெற்றி, அங்கு பெண் மாறியதால் தன் காதலை மறந்து வேறு ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டிய சூழல்! அதனால், அவர் அனுபவிக்கும் மனப் போராட்டமும், காதல் போராட்டமும் தான் ‘வெற்றிவேல்’ படத்தின் மொத்த கதையும். இதனூடே, பிரபு – விஜி சந்திரசேகரின் அண்ணன் – தங்கை குரோதத்தையும் கலந்து கட்டி வெற்றி வேலை – வீரவேலாக ஜொலிக்க விட்டிருக்கின்றனர்.

இந்த கதையை எத்தனைக்கு, எத்தனை லவ், ஆக்ஷன், சென்டிமெண்ட், பேமிலி டிராமாக சொல்ல முடியுமோ..? அத்தனைக்கு அத்தனை அழகாக, அம்சமாக சொல்லி இருக்கிறது சசிக்குமார், இயக்குனர் வசந்த மணி கூட்டணி!

‘அவங்கள்ளம் பசங்களுக்கு பாடம் சொல்லி வளர்க்கிறாங்க.. நாங்க பயிறுக்கு உரம் போட்டு வளர்க் கிறோம் நாங்களும் படிக்கலைன்னாலும் வாத்தியார் தான்… ” அவள் என் காலை மிதித்து காதலை பதித்து விட்டாள்…’ ‘மண் உரத்துல ஆரம்பிச்சு மலையாளத்துல சம்சாரிக்ர வரைக்கும் போயாச்சு…’ எனும்’ பன்ச் ‘டயலாக்குகளுடன் தன் பாணியில் கிராமத்தானாக சசிக்குமார் வாழ்ந்திருக்கிறார் வழக்கம் போலவே!

சசிக்குமார், தம்பி ராமைய்யா இருவரும் நாயகி மியாவிடம் கடலை போட கேட்டு செல்லும் இடம் ரசனை.

‘உங்களுக்கு மண்ணை பத்தி டீடெயில் வேணுமா, இல்லை என்னைப் பற்றி வேண்டுமா? ‘என எடுத்த எடுப்பிலேயே ‘பளிச்’ என கேட்கும் ஓருநாயகி ஜனனி, மியா ஜார்ஜ், நிகிலா விமல் உள்ளிட்ட நாயகியர் எல்லோரும் கிளாமர் கல்கண்டு சேர்த்து செய்த ஹோம்லி குல்கந்து.

இது மொபைல்ல பேசுற விஷயமல்ல… முகத்தைப் பார்த்து பேசுற விஷயம் என வெட்கப்படும் காட்சிகளில்… ஜனனி யாக வரும் நாயகி நச் – டச்! அதே மாதிரி அப்பனை பறிகொடுத்து, யார் என்றே தெரியாதவனுக்கு கழுத்து நீட்டும் நாயகியும், பிரபுவின் பெண்ணாக வரும் நாயகியும் கூட ‘வாவ்’ என தங்கள் நடிப்பில் வாய் பிளக்க வைக்கின்றனர்.

எந்த ஜாதிக்காரனும் வேற மதம் மாறலாம்… வேற ஜாதி மாற முடியுமா.? எனவேறு ஜாதி இளவரசு தன் மகனுக்காக பெண் கேட்டு வரும் போது பக்குவமாக பேசி அனுப்பும் இளைய திலகம்பிரபு, ஒத்தாசை – தம்பி ராமைய்யா, சமுத்திரகனி, விஜய் வசந்த், இளவரசு, ரேணுகா, விஜி, அந்த தம்பி சரவணன்கேரக்டர், அவரது ஜோடி… உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட் டுள்ளனர்.

‘மைதா மாவுல மன்மத வித்தை காண்பிக்கிறான் சார்…’ என தம்பி ராமைய்யா சவுண்டு அவர் இளம் மனைவியின் கமெண்ட் எல்லாம் நாராச டைப் என்றாலும் நல் ரசனை.

D.இமானின் இசையில் “ஆட்டம் போட்டு ஆரம்பிப்போம் சும்மா நிக்காதே… ” ,”அடியே உன்ன பார்த்திட பார்த்திட நான் கொலஞ்சேனே… ”, ”அதுவா, இதுவா இவ எப் பத் தான் சொல்லுவாளோ… ” , ”உன்னப் போல ஒருத்தரை பார்த்ததே இல்ல… “உள்ளிட்ட பாடல்கள் சுபராகம்.

D.இமானின் இனிய இசை மாதிரியே, S.R.கதிரின் கிராமிய அழகு நிரம்பிய ஒவியப்பதிவு, A.L.ரமேஷின் பக்கா படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயின்ட்டுகள் வசந்த மணியின் இயக்கத்திற்கு பக்காபலம்!

அதே நேரம், சசியின் படிக்காத அம்மா ரேணுகா அசால்ட்டாக மகனுக்கு வந்த கொரியரை ஸ்டெலா க பேனா பிடித்து கையெழுத்துப் போட்டு வாங்குவது, ஆரம்பம் முதல் அடிக்கடி நிகழும் தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள்… உள்ளிட்ட குறைகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் வெற்றிவேல் – வீரவேல்! வசூல் வேலாகவும்

RATING : 3.0/5