Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெற்றிமாறன் அடுத்து இயக்கப் போகும் ஹீரோ யார் தெரியுமா? இது வேற மாதிரியான கூட்டணி
வெற்றிமாறன் என்றால் தரம் என்ற வார்த்தைக்கு ஏற்ப அவரது படங்கள் ஒவ்வொன்றும் தமிழ்சினிமாவில் முத்திரை பதித்துக் கொண்டிருக்கிறது. வெற்றிமாறன் இயக்கும் படங்கள் அனைத்திலும் தனுஷ் மட்டுமே நடித்துக்கொண்டிருக்கிறார். விசாரணை என்ற படத்தில் மட்டும் அட்டகத்தி தினேஷ் நடித்தார். ஆனால் அந்த படத்தை தனுஷ்தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வெற்றிமாறன் தற்போது முன்னணி நடிகர்கள் ஒருவருடன் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அது வேற யாரும் இல்லை, நடிகர் சூர்யா உடன் தனது அடுத்த ஆட்டத்தை தொடங்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
சூர்யாவும் சமீபகாலமாக ஹிட் கொடுக்க முடியாமல் தடுமாறி வந்தார். கடந்த மாதம் வெளிவந்த காப்பான் ஓரளவு வெற்றி பெற்று சூர்யாவுக்கு நம்பிக்கை கொடுத்தது. இந்த வெற்றியை தக்கவைத்துக்கொள்ள சூர்யா தொடர்ந்து பெரிய இயக்குனர்களுடன் கைகோர்த்து வருகிறார்.
அந்த வரிசையில் வெற்றிமாறன் இடம் கதை கேட்டு இருப்பதாகவும், அனேகமாக அடுத்த படமே வெற்றிமாறன் உடன் இருக்கலாம் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உண்மையிலேயே இது வேற மாதிரியான காம்போ தான்..
