fbpx
Connect with us

Cinemapettai

இவருக்கு தான் அடுத்த படம்.. தளபதி 65 பட வாய்ப்பை தட்டித் தூக்கிய இயக்குனர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இவருக்கு தான் அடுத்த படம்.. தளபதி 65 பட வாய்ப்பை தட்டித் தூக்கிய இயக்குனர்

தளபதி விஜய் தற்போது தளபதி 64 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மாநகரம், கைதி என வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கின்றனர்.

மூன்று கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது நான்காவது கட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகாவில் நடந்து வருகிறது. இதில் பிரம்மாண்ட ஜெயில் செட் ஒன்று அமைத்து அதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருக்கு இடையேயான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

தற்போது தளபதி 65 படத்தை யார் இயக்கப் போகிறது என கோடம்பாக்கத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. ஆனால் இயக்குனரை நீண்ட நாட்களுக்கு முன்னரே தளபதி முடிவு செய்துவிட்டார் என அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆம். நம் சினிமா பேட்டையில் ஏற்கனவே தெரிவித்ததை போல தளபதி 65 படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். மேலும் அசுரன் படத்தில் பணியாற்றிய அனைத்து டெக்னீஷியன்கள் மற்றும் நடிகர்களும் இந்த படத்திலும் இருக்க வேண்டும் என தளபதி கட்டளையிட்டுள்ளாராம்.

எனவே பரபரப்பான வேலையில் வெற்றி மாறன் இறங்கியுள்ளதாக தெரிகிறது. மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு தளபதி கிராமத்து கதைகளில் நடிக்க இருப்பதால் இப்பொழுதே படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது.

மேலும் படத்திற்கு தீவிர தளபதி ரசிகரான ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க இருப்பதும் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் அடுத்த தீபாவளி போட்டியில் களம் இறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top