வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

விஜய்யை மறைமுகமாக தாக்கிய வெற்றிமாறன்.. விடுதலை 2 ட்ரைலரால் கிளம்பிய சர்ச்சை

Vijay-Vetrimaaran: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்த விடுதலை கடந்த வருடம் வெளியானது. அதை அடுத்து விடுதலை 2 டிசம்பர் 20 வெளியாகிறது. விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் என பலர் நடித்து இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.

பல மாதங்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த இந்த ட்ரெய்லர் இப்போது வரவேற்பு பெற்று வருகிறது. அதிலும் வசனங்கள் ஒவ்வொன்றும் அனல் தெறிக்கும் வகையில் இருக்கிறது. அதில் இறுதியில் வரும் ஒரு வசனம் தான் இப்போது சர்ச்சையாக மாறி இருக்கிறது.

அதாவது தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை தான் உருவாக்குவார்கள். அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது என விஜய் சேதுபதி கூறுவது போல் வசனம் இருக்கும். இதன் மூலம் வெற்றிமாறன் விஜய்யை மறைமுகமாக தாக்கியதாக தற்போது ஒரு பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது.

விடுதலை 2 வசனத்தால் வெடித்த சர்ச்சை

ஏனென்றால் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய் சமீபத்தில் மாநில முதல் மாநாட்டை நடத்தி இருந்தார். அப்போது அவர் பேசியதில் என்ன மாதிரியான தத்துவத்தை இந்த கட்சி பின்பற்றுகிறது என்ற குழப்பம் அனைவருக்கும் இருந்தது.

அதை சில அரசியல் பிரமுகர்கள் கூட விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த சூழலில் இப்படி ஒரு வசனத்தை வெற்றிமாறன் தன் படத்தில் வைத்திருப்பது அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

இதை நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் வைரல் செய்து வரும் நிலையில் விஜய் ரசிகர்கள் தகுந்த பதிலடி கொடுத்திருக்கின்றனர். அவர் தன்னுடைய தத்துவத்தை தெளிவாக சொல்லிவிட்டார். ஆனால் உங்களுக்கு தான் அது புரியவில்லை என சப்போர்ட் செய்து வருகின்றனர்.

அதே சமயம் கதை 80 காலகட்டத்தில் நடப்பது போல் எடுக்கப்பட்டிருக்கிறது. அப்போது எந்த நடிகர் தலைவராக இருந்தார் எனவும் குட்டு வைத்து வருகின்றனர். இதனால் சோசியல் மீடியாவில் தற்போது ஒரு வாய்க்கா தகராறு ஆரம்பித்திருக்கிறது.

- Advertisement -

Trending News