Connect with us

Cinemapettai

விஜய் வாய்ப்பு கொடுத்தும் முடியாது என்ற வெற்றிமாறன்.. காரணம் இதுதான்!

vijay-vetri-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் வாய்ப்பு கொடுத்தும் முடியாது என்ற வெற்றிமாறன்.. காரணம் இதுதான்!

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி 65 படத்தை முருகதாஸ் இயக்க இருந்த நிலையில் தற்போது அவர் விலகிய செய்திதான் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முருகதாஸின் சமீபத்திய படங்கள் அனைத்துமே தோல்வியை சந்தித்த நிலையில் விஜய் அவருக்கு தளபதி65 பட வாய்ப்பை கொடுத்தார்.

ஆனால் முருகதாஸ் அரைத்த மாவையே திரும்ப திரும்ப அழைத்ததால் டென்ஷனான விஜய் பிறகு இணைந்து பணியாற்றலாம் என அவரை ஒதுக்கி விட்டாராம்.

இந்நிலையில் தளபதி65 பட வாய்ப்பை இயக்கும் அதிர்ஷ்டத்தை வெற்றிமாறனுக்கு கொடுத்துள்ளார் விஜய்.

ஆனால் வெற்றிமாறன் இப்போதைக்கு முடியாது என்று கூறியதுதான் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெற்றிமாறன் அடுத்ததாக சூரி படம் அடுத்து தனுஷ் படம் சூர்யாவின் வாடிவாசல் ஆகிய படங்களை முடித்த பிறகுதான் விஜய் படத்திற்கு வர முடியுமாம்.

இதனால் விஜய்க்கு நன்றி கூறி விடை பெற்றுக் கொண்டாராம் முருகதாஸ். இருந்தாலும் தளபதி 65 படத்தில் அட்லீ துண்டு போட்டு வைத்திருப்பதாக தெரிகிறது.

vijay-vetrimaran-cinemapettai

vijay-vetrimaran-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top